இந்து சமுத்திரத்தின் மணியென விளங்குகின்ற இலங்கைத் திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வடபகுதியில் பக்தி மார்க்கமும் கிரியா மார்க்கமும் அமையப்பெற்ற பச்சிலைப்பள்ளி பகுதியில் பரம் பெருமை மிக்க புதுமை வாய்ந்த ஆலயங்கள் பலவற்றுள் முகாவில் பகுதியில் அமைந்துள்ளது திரியாhய் அம்மன் ஆலயம். இது சோழர் காலத்து வரலாறுகளைக் கொண்டதாகும்.
புஸ்ரீதத்தம்பி எனும் சிற்றரசன் தனது ஆட்சியின் போதுசெம்பியன்பற்று ஊடாக சுற்றுலா வரும் வழியில் திரியார் அம்மன் ஆலயத்தினை தரிசித்து பின் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வணங்கி ஆனையிறவின் ஊடாக புஸ்ரீநகரி கோட்டையைச் சென்றடைவதாக முன்னைய வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகின்ற கண்ணகியம்பாள் மதுரையை எரித்த பின்பு இலங்கைத் திருநாட்டிற்கு வந்ததாகவும் வடபகுதியின் கண்ணே வந்த கண்ணகியம்பாள் வரும் வழியில் பல இடங்களில் தங்கியிருந்து இளைப்பாறிச் சென்று இறுதியாக வற்றாப்பளையிலிருந்து அருளாட்சி புரிவதாகவும் கூறப்படுகின்றது. ஆவர் இளைப்பாறிச்சென்ற இடங்களில் முகாவில் திரியாய் பகுதியும் ஒன்றெனக் கூறப்படுகின்றது.
இவ் ஆலயம் அமைந்திருக்கும் இடம் பனை மரங்களும், வடலிகள் மற்றம் ஆல் அரசு பாலை மரங்கள் நிறைந்த சோலையாகவும் காணப்பட்டதால் அம்பாள் சோலை நடுவே இருந்து இளைப்பாறிச் சென்ற இடத்தில் அக் காலத்தில் வாழ்ந்த அப் பகுதி மக்களால் ஆலயம் அமைத்து வழிபடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதிசயங்களும் அற்புதங்களும்
அம்பாள் கோவில் அமைந்திருக்கம் காணியிலுள்ள பனை மரங்களின் பனம் பழங்கள் தீன் சுவை கொண்டதாக இருந்ததாகவும் அக்காணிப் பராமரிப்பாளர்கள் அப் பனம் பழங்களை எடுத்து ஒன்று சேர்த்து வைத்தால் அவை காணாமல் போவதாகவும் அறியப்பட்டது அதனால் மனவேதனையடைந்த அக்காணியைப் பராமரித்து வந்த பெண்ணொருவர் பனம் பழம் எடுக்கும் கள்வரைப் பிடிப்பதற்காக ஒளிந்திருந்ததாகவும் அதன் போது கிழவி வடிவில் வந்த மாது ஒருவர் பனம் பழங்களை எடுத்ததாகவும் அதனைக் கண்ட அந்தப் பெண் வயோதிப மாதுவுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு பனம் பழங்களை பறித்ததாகவும் இறுதியில் பனம் பழங்களையும் பாண்டு கிழவி வடிவில் வந்த மாது மறைந்ததாகவும் அறியப்படுகின்றது.
ஆன்றிரவு புஸ்ரீசகரின் கனவில் தோன்றிஅ ம்பாள் தனது ஆலயத்தில் பனம் பழம் பொறுக்கி வைத்திருக்கின்றேன் அதை நெருப்பில் வேகவைத்து தனக்கு நைவேத்தியமாக படைக்குமாறு கூறியதாகவும் புஸ்ரீசகர் மறுநாள் காலை ஆலயத்தினுள் சென்று பார்த்த போது பனம்பழங்கள் இருந்ததாகவும், அதை அவர் அம்பாளுக்கு நைவேத்தியமாக படைத்ததாவும் கூறப்படுகின்றது.
அக் காலத்தில் கோவில் சுற்றாடலில் வாழ்ந்த செல்வந்தர் ஓருவர் பிள்ளைச் செல்வத்திற்காக அம்பாளை வேண்டி விரதம் இருந்ததாகவும் இரவு கனவில் தோன்றிய அம்பாள் நீ ஏழு தீர்த்தக் கிணறுகளை அமைத்து மக்களின் தாகத்தை தீர்த்து வைத்தால் உனது வேண்டுதல் நிறைவேறும் என அருளியதாகவும் அதன் படி அந்த செல்வந்தர் அம்பாள் ஆலயத்திலும் இன்னும் பல இடங்களிலும் ஏழு கிணறுகள்அமைத்து மக்கள் பாவனைக்கு விட்டதன் பயனாக அவர் பிள்ளைச் செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்ததாகவும் இங்குள்ள முதியவர்களால் கூறப்படுகின்றது. அவரால் செங்கல்லினால் அமைக்கப்பட்ட கிணறு இன்றும் ஆலயத்தில் காணப்படுகின்றது.
அக்காலத்தில் உடுத்துறை துறைமுகமாக விளங்கியதாகவும் வியாபார நோக்கில் கப்பல்கள் தரித்து நிற்பதாவும் வியாபார நோக்கில் பொருட்களை ஏற்றிய கப்பல் புறப்பட முடியாமல் இயந்திரப் பகுதி இயங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அதனால் செய்வதறியாமல் நின்ற கப்பல் தலைமை அதிகாரியிடம் மீனவ வடிவில் வந்த வயோதிபர் நீங்கள் கப்பலில் அம்பாள் ஆலயத்திற்குரிய சொத்துக்களையும் பொருட்களையும் கால்நடைகளையும் ஏற்றி இருக்கின்றீர்கள் அவற்றை இறக்கி விட்டு ஆலயத்திற்கு சென்று அம்பாளுக்கு வேண்டிய புஸ்ரீசைகளை செய்து அம்பாளின் அருளைப் பெற்று வந்து மீண்டும் கப்பலை செலுத்தங்கள் என் வேண்டினாராம். ஆதன்பாடியே கப்பல் அதிகாரி அம்பாள் ஆலயம் வந்து வேண்டிய புஸ்ரீசைகளை செய்து புஸ்ரீசகரால் வழங்கப்பட்ட தீர்த்தத்தை கொண்டு சென்று கப்பலை துப்பரவு செய்த பின்னர் கப்பல் புறப்பட்டு சென்றதாகவும் செவிவழிக் கதையில் கூறப்படுகின்றது.
மேலும் கோவிலை உதாசீனம் செய்தவர்களை பாம்பு வடிவில் தோன்றி மீண்டும் நல்வழிப்படுத்திய பல சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்ட இவ் ஆலயத்தின் பொங்கல், திருக்குளிர்த்தி உற்சவமானது வைகாசி விசாகத்துடன் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். ஆன்றைய தினம் கதிப்காமம் செல்லும் பாதயாத்திரிகளும், இவ்வாலயத்திலிருந்து செல்லும் பாத யாத்திரிகளும் இணைந்துகொண்டு வற்றாப்பளை போய் கதிர்காமம் போவதாகவும் கூறப்படுகின்றது.
Leave a Reply