திராக்கரைப் பிள்ளையார் 1950 ஆம் ஆண்டு கோவிந்த பிள்ளை என்பவருடைய காணியில் வீரகத்தி வேலுப்பிள்ளை (தாத்தா வேலுப்பிள்ளை) கோவிந்த பிள்ளை என்பவர்களால் காவோலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டது, பின்னர் ஊர்மக்களின் உதவியுடன் ஊர் பெரியவர்களால் (புண்ணியமூர்த்தி, கந்தசாமி,நாகராசா,சபாரத்தினம்,செல்லையா,பெரிய பொன்னுத்துரை,சின்ன பொன்னுத்துரை)1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.ஆரம்ப காலங்களில் கிழமைப் பஸ்ரீசை (வெள்ளி) இடம்பெற்றது.பின்னர் அது நித்திய பஸ்ரீசையாக மாற்றப்பட்டடு இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. அத்துடன் 10 நாட்கள் அபிசேகத்திருவிழாக்களும், ஒருநாள் அலங்காரத்திருவிழாவும்,சித்திராபௌர்ணமி தினத்தில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.
பின்னர் வீரகத்திப்பிள்ளையார்(தாத்தா வேலுப்பிள்ளை) இறந்த பின்னர் அவரது துணைவியார் நாகரத்தினம் மற்றும் பிள்ளைகள் ஊர் பெரியவர்களின் தலைமையில் ஆலய நிர்வாகம் இயங்கி வந்தது. பின்னர் ஆலய பரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்டது.யுத்த காலப்பகுதியில் பல இடப்பெயர்வுகளை சந்தித்து யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பு 2013 ஆம் ஆண்டு ஆலயம் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2017 இல் கும்பாபிசேகம் செய்யப்பட்டு நித்திய பஸ்ரீசையும் ஆவணி மாதம் 10 நாள் கொடியேற்றத்துடன் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயத்தில் பிள்ளையார் கதை 21 நாட்களும் வருடம் தோறும் இடம்பெற்று கும்பத்தாழ்வுடன் நிறைவு பெறும். இவ் ஆலயத்தின் புதுமைகளில் ஒன்றாக “இற்றைக்கு 30-35 வருடங்களிற்கு முன்னர் இவ்வாலய பிள்ளையார் கதை கும்பத்தாழ்வு நிகழ்வின் போது 10 வயதிற்குட்பட்ட இரு சிறுவர்கள் திராக்கரை குளத்தில் நீராடும் போது நீரில் மூழ்கி ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் ஒயிருடன் ஊர் மக்களால் மீட்கப்பட்டனர்.” இச்சம்பவம் ஊர்மக்கள் அறிய நடந்த உண்மைச் சம்பவம்.
இச்சம்பவத்திற்கு பின்னர் ஊர் மக்கள் இவ்வாலயத்தின் மீது இதீத நம்பிக்கையுடனும் பக்தியுடனும் திருவிழாக்களிலும் நித்திய வழிபாடுகளிலும் கோவில் விசேட பஸ்ரீசை வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply