ஈழவள நாட்டின் வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமமானது பழைய குடியேற்த்திட்டம் என அழைக்கப்பட்ட அக்காலத்திலே புலோப்பளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை செல்லையா எனபவர் 1935 ஆண்டு காலப்பகுதியில் கணேசபுரத்தில் குடியேறி தனக்குக் கிடைத்த காணியைக் காடுவெட்டி துப்பரவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அத்தோடு தமது காணிக்கு உரித்தான வயல் காணியை துப்பரவு செய்யும் போது அங்கு ஒரு ஆல விருட்சம் காணப்பட்தாகவும் அந்த நேரத்திலேயே தன்னை இங்கு வைத்து ஆதாரிக்குமாறு ஓர் அசரீரி கேட்டதாகவும், உடனே தமது குலதெய்வமாக புலோப்பளை அறத்தி கண்ணகி அம்மனை நினைவு கொண்டு அக்கண்ணகி அம்பாளையே நினைத்து இவ்விடத்தில் ஓர் சிறிய கோவில்கட்டி வழிபடத் தொடங்கினார்.
பின் இப்பகுதி வாழ் மக்களும் இவ்வாலயத்திற்த்துக்குச் சென்று வழிபடலானார்கள். மூலமூர்த்தியாக கண்ணகி அம்மன் இருந்த பேர்தும் இப்பகுதி மக்கள், அக் கோயிலை தமது காவல் தெய்வமாகிய முனியப்பர் இருப்பதாகக் கருதி இக்கோயிலுக்கு முனியப்பர் கோயில் என்ற பெயருள் கொண்டு அழைக்கலானார்கள். காலப்போக்கில் கோயிலின் புதுமைகளின் காரணமாக மக்கள் கூடிய ஈடுபாட்டுடன் இவ்வாலத்தில் பூசைகள், பொங்கலகள் எனச் செய்து தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர். இதுமட்டுமல்லாது இவ்ஆலயத்தைப் பெரிதாக அமைத்து ஆலயத்தை புதுமெருகூட்டும் எண்ணத்துடன் செல்லையா குடும்பத்தாருடன் பக்கதர்கள் கதைத்த வேளையில், செல்லையாவின் மூத்தபுதல்வி கணபதிப்பிள்ளை செல்லம்மா என்பவர் தனக்கு தந்தையாரால் வழங்கப்பட்ட கோயில் காணியை கோவில் காணியை கோவிலுக்காக விட்டுக்கொடுத்து கோவில் அமைப்பதற்கு உதவினார்.
இதன்பின் இவ்வாலயமானது வளர்ச்சியடைந்து ஒவ்வோர் வைகாசி விசாகத்தில் பாரிய பொங்கல் பூசைகள் மற்றும் காவடி, பாற்செம்பு என பக்தர்கள் தமது ஈடுபாட்டை காட்டினார்கள். இவ்வேளையில் கணபதிப்பிள்ளை செல்லையா இறைவனடி சேர்ந்தபின், அவரது மகள் பேதுறுப்பிள்ளை பொன்னம்மா பொதுமக்களின் உதவியுடனும் ஊர்மக்களின் ஒத்துழைப்புடனும் அயராது பாடுபட்டு ஆலயத்தைப் புதுப்பொலிவுடன் ஆக்கிஇவ்வருடம் அதாவது 13.05.2013 ல் பொதுமக்களுக்கே ஆலய நிர்வாக சபையை ஆரம்பித்து மக்கள் மயப்படுத்தினார். இன்று இவ்வாலயமானது ஆலய நிர்வாகத்தின் முயற்சியினாலும் பக்த அடியார்களினாலும் புதுமெருகுப்பெற்று 22.11.2013 அன்று கும்பாபிN~கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply