
2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா இன்று பிற்பகல் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .
மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில்
பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வே.ஆயகுலன் பூநகரி பிரதேச செயலாளர், பா.முகுந்தன் விளையாட்டுத்திணைக்களம் வட மாகாணம் ஆகியோருடன் கௌரவ விருந்தினர்களாக தேசிய ரீதியில் சாதனை படைத்த வீர,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கடந்த நாட்களில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று கரைச்சி பிரதேச செயலக அணி சம்பியனாகியது.
புள்ளிகளின் அடிப்படையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் 30புள்ளிகளைப்பெற்று நான்காம் இடத்தினையும் 82புள்ளிகளைப்பெற்று பூநகரி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் 124புள்ளிகளைப்பெற்று கண்டாவளை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும் 260புள்ளிகளைப்பெற்று கரைச்சி பிரதேச செயலகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
இன்றைய இறுதிநாள் நிகழ்வில் மெய்வல்லுநர் விளையாட்டுக்களோடு கால்பந்தாட்ட போட்டியும் இடம்பெற்றிருந்தது.
இறுதியில் அதிதிகளின் வாழ்த்துரைகளுடன் சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் வீர வீராங்கனைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இன்றைய மாவட்ட விழாவில் நான்கு பிரதேச செயலகங்களிலும் இருந்து வீர வீராங்கனைகள் கலந்துகொண்டு நிகழ்வில் தமது திறமைகளை வெளிக்காட்டி விழாவை சிறப்பித்திருந்தனர்.
Leave a Reply