கச்சார்வெளிப்பிள்ளையார் ஆலயம்

Posted on

by

இற்றைக்கு சுமார் 400 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இங்கு விநாயகர் வழிபாடு மேலோங்கி இருந்து வருகின்றமையை அறியக்கூடியதாக உள்ளது. இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகரின் சிறக்கம்சம் யாதெனில் இங்குள்ள கர்ப்பக்கிரகத்தில் அமையப்பெற்ற மூல விக்கிரகம் எவராலும் ஸ்தாபிக்கப்படாமல் தானாகவே தோன்றியது ஆகும்.
ஏறத்தாள 300 வருடங்களிற்கு முன்பாக ஒரு மரத்தடியில் பிள்ளையாரை நினைத்து ஒரு கல் வைத்து வணங்கி வந்தனர். அருகிலே கொட்டுக்கிணறு இருந்தது. ஊரில் உள்ளவர்கள் இக்கிணற்றின் மூலம் தான் தண்ணீர் தேவையை புஸ்ரீர்த்தி செய்து வந்தனர்.

ஆக்காலப்பகுதியில் “குரைக்கந்தர்” என்பவரும் அவரது மனைவி :தெய்வி” என்பவரும் இவ்வுஸ்ரீரில் வசித்து வந்தனர். இவர்கள் வறுமைப்பட்;டவர்கள். இங்குள்ள நிலச்சுவாந்தர்களிடம் குரைக்கந்தர் கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி விநாயகக் கடவுள் மீது அளவற்ற பக்தி உடையவராக விளங்கினார். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் குழந்தை பாக்கியம் வேண்டி விநாயகப்பெருமானை ஒவ்வொரு நாளும் வழிபட்டு வந்தார்.


இவ்வாறு வழிபட்டு வருகையில் ஒருநாள் தெய்விக்கு விநாயகர் நேரிலே காட்சி கொடுத்தார். அப்போது தெய்வியுடன் எம்பெருமான் உரையாடி முடிவில் தான் காட்சி கொடுத்ததைப் பற்றியோ உரையாடலைப் பற்றியோ எவரிடமும் கூறக்கூடாது என்றும் அப்படிக் கூறினால் தலை வெடித்து இறந்து விடுவாய் என்று கூறி மறைந்தருளினார். ஏதிர் பாராத இவ் அதிர்ச்சியால் ஏக்கமடைந்தவர் போன்று காணப்பட்ட தெய்வி தமது இல்லத்திற்கு திரும்பினார். மதிய உணவிற்காக வீடு திரும்பிய கணவர் , மனைவியின் மனநிலையில் மாறுதல் கண்டு என்ன நடந்தது என்று வினாவினார். மனைவி எதுவும் பேசாது இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் அடி உதையுடன் மனைவியைத் தாக்கத் தொடங்கினார். வேதனை தாங்க முடியாத மனைவி “நான் கூறினால் தலை வெடித்து இறந்து விடுவேன்” எனக்கூறியும் கந்தர் விட்ட பாடில்லை. எனவே தெய்வி நிகழ்ந்த சம்பவத்தை கூறிமுடிக்க தலை வெடித்து இறந்து போனாள். குந்தர் தான் தொழில் செய்யும் முதலாளியிடம் ஓடோடிச் சென்று நிகழ்ந்த சம்பவத்தை கூறி அழுது புலம்பினார்.


இது இவ்வாறிருக்க கந்தரின் முதலாளியின் கனவில் எம் பெருமான் தோன்றி அங்கு ஓர் இடத்தைக் காட்டி அங்கே கல்வடிவில் தான் வீற்றிருப்hது ஆகவும் , என்னை நினைத்த எல்லோரையும் அவ்விடத்தில் வழிபாடு இயற்றும் படியும் அவ்வாறு வழிபடுபவர்களுக்கு சகல சைளபாக்கியமும் கைகூடும் என்றும் , அவரது திருவுடலை குறிப்பிட்ட இடத்தில் நல்லடக்கம் செய்யுமாறு கூறிமறைந்தார். தேய்வியின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அறியமுடியாது போய்விட்டது. ஆனால் தான் தோன்றி விநாயகராக காட்சி கொடுத்த இந்தக் கல் அமைந்த இடம் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது.


இப்படியாக 1950ம் ஆண்டிற்குப் பின் ஆலயம் முற்றாக சேதமாகி புஸ்ரீசையின்றி கவனிப்பின்றி கிடந்த நிலை ஒருநாள் பெரிய பளையைச் சேர்ந்த சின்னக்குட்டி கந்தையா என்பவர் விநாயகரை வழிபடும் நோக்கில் வந்தவேளையில் ஆலயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் நொந்து அன்ன ஆகாரம் இன்றி இவ்வாலயத்திலேயே தங்கிவிட்டார். புளை இரட்டைக்கேணி ஆலயத்தில் இயங்கி வந்த சன்மார்க்கச் சங்கத்தினர் இதை அறிந்து விநாயகப் பெருமான் அடியார்களது ஒத்துழைப்போடு ஆலயத்திற்கு சிறிய கட்டிடம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *