கந்தசாமி கோயில் – வட்டக்கச்சி

Posted on

by

1953 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடங்கிய கிளிநொச்சியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் மக்கள் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்ட போது கோயில்கள் பாடசாலை தபாலகம் கூட்டுறவுச் சங்கம் விளையாட்டுமைதானம் போன்ற பொதுத் தேவைகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டன. இந்த வகையிலேயே முருகன் கோயிலுக்கான இக்காணி ஒதுக்கீடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது .முதலில் குடியேறிய மூத்த குடிமகனும் சைவ ஆசாரம் நிரம்பிய வருமான குடும்பி சின்னத்தம்பி, வழுக்கழார் கணபதிப்பிள்ளை மற்றும் குடியேற்ற வாசிகளும் இணைந்து 1954 ஆம் ஆண்டு தைப்பூச தினத்தன்று இக் காணியில் வேல் நாட்டி சிறு கொட்டகை அமைத்து பூஜைகள் நடைபெற ஒழுங்கு செய்தார். இவ்வூரில் வாழ்ந்து வந்த ஆறுமுகம் சோமசுந்தரம் எனும் சாமியார் வாய் கட்டி நீண்ட காலம் பூஜை செய்து வந்தார். வெள்ளி தோறும் கூட்டுப் பிரார்த்தனைகள் இடம்பெற்று வந்தன.

1955 ஆம் ஆண்டு குடும்பிச் சின்னத்தம்பி தலைமையில் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு. அவ்வாண்டிலேயே மூலஸ்தானத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. இதன்பின் 1989 ஆம் ஆண்டில் புதிய நிர்வாகம் கட்டுமான வேலைகளை விரைவுபடுத்தின. ஆலயத்தின் சகல மண்டபங்களும் கட்டப்பட்டு 1995 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 21 ஆம் நாள் மகா கும்பாபிஷேகம் வேதாகம ஜோதிட பூஷண சிவஸ்ரீ சிதம்பரநாத குருக்கள் மூலம் சிறப்புடன் நடந்தேறியது . 2010 ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தின் பின் முறையாக பாலஸ்தானம் செய்யப்பட்டு ஒரு நேர பூஜை இடம்பெற்றது.

2011 ஆம் ஆண்டில் தெரிவாகிய நிர்வாக சபையின் முயற்சியால் மண்டபங்கள் திருத்தி அமைக்கப்பட்டு விஜய வருடம் வைகாசி திங்கள் 15ஆம் நாள் புனருத்தாரணத்தின் பின் மகா கும்பாபிஷேகத்தை நடாத்தினார்கள். இக் கைங்கரியத்தை சக்தி உபாசகர் சாதக இளவரசு சிவஸ்ரீ சுந்தரஸ்ரீ ரங்கநாத குருக்கள் நிறைவேற்றினர். வருடாந்த மகோற்சவம் 14-06-2013 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின் முதன்முறையாக இடம்பெற்றது கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் இங்கே அறநெறிப் பாடசாலைகள் சிறப்புற நடைபெறுவது மட்டுமல்லாது சைவ சமய போட்டிகளிலும் அறநெறி மாணவர்கள் முன்னிலையில் திகழ்கிறார்கள் .

கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி ஆனிப்பூரணை அன்று தீர்த்தோற்சவம் நடைபெறும். இங்கே பரிவார தெய்வங்களாக பிள்ளையார் நவக்கிரகம் வைரவர் போன்ற தெய்வங்களும் அருள் அருட்கடாட்சம் புரிகின்றனர் .இங்கு கந்த சஷ்டி விரதம் அனுஷ்டானம் சூரன்போர் சிறப்பாக நடைபெறும். வள்ளி-தெய்வானை சேனாதிபதியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *