வரசித்தி விநாயகர் -மலையாளபுரம்

Posted on

by

ஈழத்தின் வட கோடியில் இலங்காபுரி நன்நகரில் கிளிநொச்சி மாவட்டத்தில் காடு மண்டிய பகுதியாக இருந்து இன்று பசுமையும், செழுமையும் நிறைந்து செந்நெல்வயல்கள், செங்கரும்புத்தோட்டங்கள், தின்னக் கனிகள், தெவிட்டாய் பயன்மரங்கள் கொண்ட செழிப்பான பகுதியாக குடியேறிய மக்கள் தமது இரத்த வியர்வையினாலும் பல தரப்பட்ட இடர்களுக்கு மத்தியில் தமது உயிர்களையும் பலிகொடுத்து உருவாக்கிய மலையாளபுரம் கிராமம் அன்று,காட்டு மிருகங்களின் கொடூரங்களையும் தாண்டி மதங்கொண்ட யானைகளையும், விசஜந்துக்கள், கொலறா,மலேரியா, நோய்களையும் தாண்டி தமது உயிர்களையும் பலி கொடுத்து வரசித்தி விநாயகனை மனதில் நிறுத்தி, உயிர் கொல்லும் காட்டு காட்டு மிருகங்களையும் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து இம் மக்கள் 1977 ஆம் ஆண்டுக்க முற்பட்ட காலத்தில் தற்போது இக் கிராமப் பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் விறகு வெட்ட செல்பவர்கள் வழிப்பாதையாக பயன்னடுத்தப்பட்ட இடத்தில் பாலை மரத்தின் கீழ் இலைகளை அடையாளத்திற்காகப் போட்டுச் செல்லும் வழக்கமாக இருந்தது.

1977 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிதாக குடியேறிய மக்களுக்கு இப் பாலை மரத்தடி பெரும் சக்தியாக இருந்தது. காடுகளை வெட்டி குடியேறிய மக்கள் நாளாந்தம் யானைகளின் வருகையினால் மிகவும் அச்சப்பட்டு தமது அன்றாட வழ்க்கையினை கடந்து வந்தார்கள். அவ்வாறு கால மக்கள் தங்களது அச்சத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டு அன்றைய காலகட்டத்தில் வசித்து வந்த நல்லுள்ளம் கொண்ட பலரின் கூட்டு முயற்சியால் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம் மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக யானை முகம் கொண்ட பிள்ளையாரை இங்கே அழைக்க வேண்டுமென முடிவெடுத்தார்கள் அத்தோடு அதற்கு உருவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அழகான ஒரு கருங்கல்லை கொண்டு வந்து எல்லோரும் ஆறுதலடையும் அந்தப் பெரிய பாலை மரத்தடியைத் தூய்மைப்படுத்தி காலம் சென்ற சந்திரசேகரம், சுக்குரு, அடைக்கப்பன், இராமலிங்கம் போன்றவர்களின் முன் முயற்சியால் பாலவிநாயகர் என்னும் ஆலயத்தை உருவாக்கி வழிபடத்தொடங்கினார்கள்.

விநாயகர் வழிபாட்டின் பிற்பகுதியில் இக்கிராமத்தில் யானைகள் வருகை குறைவடைந்ததுடன், மக்களும் தமது அன்றாட வாழ்வில் அச்சமின்றி வாழத்தொடங்கினார்கள் என்பதே வரசித்தி விநாயகரின் சிறப்பம்சமாகும். இவ்வாறாக பலரின் முயற்சியால் இப்போது ஆலயம் கட்டப்பட்டு விமர்சயாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *