இந்து சமுத்திரத்தின் மணியென விளங்குகின்ற இலங்கைத் திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வடபகுதியில் பக்தி மார்க்கமும் கிரியா மார்க்கமும் அமையப்பெற்ற பச்சிலைப்பள்ளி பகுதியில் பரம் பெருமை மிக்க புதுமை வாய்ந்த ஆலயங்கள் பலவற்றுள் முகாவில் பகுதியில் அமைந்துள்ளது திரியாhய் அம்மன் ஆலயம். இது சோழர் காலத்து வரலாறுகளைக் கொண்டதாகும்.
புஸ்ரீதத்தம்பி எனும் சிற்றரசன் தனது ஆட்சியின் போதுசெம்பியன்பற்று ஊடாக சுற்றுலா வரும் வழியில் திரியார் அம்மன் ஆலயத்தினை தரிசித்து பின் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வணங்கி ஆனையிறவின் ஊடாக புஸ்ரீநகரி கோட்டையைச் சென்றடைவதாக முன்னைய வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகின்ற கண்ணகியம்பாள் மதுரையை எரித்த பின்பு இலங்கைத் திருநாட்டிற்கு வந்ததாகவும் வடபகுதியின் கண்ணே வந்த கண்ணகியம்பாள் வரும் வழியில் பல இடங்களில் தங்கியிருந்து இளைப்பாறிச் சென்று இறுதியாக வற்றாப்பளையிலிருந்து அருளாட்சி புரிவதாகவும் கூறப்படுகின்றது. ஆவர் இளைப்பாறிச்சென்ற இடங்களில் முகாவில் திரியாய் பகுதியும் ஒன்றெனக் கூறப்படுகின்றது.
இவ் ஆலயம் அமைந்திருக்கும் இடம் பனை மரங்களும்இ வடலிகள் மற்றம் ஆல் அரசு பாலை மரங்கள் நிறைந்த சோலையாகவும் காணப்பட்டதால் அம்பாள் சோலை நடுவே இருந்து இளைப்பாறிச் சென்ற இடத்தில் அக் காலத்தில் வாழ்ந்த அப் பகுதி மக்களால் ஆலயம் அமைத்து வழிபடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
Leave a Reply