“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாக்கிற்கு இணங்க இவ்வாலயமானது நூற்றாண்டுகள் கடந்து வழிபட்டு வருகின்ற ஒரு தலமாகும்.ஆலயத்தின் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறுகள் எழுதப்பட்டவையாக எவையும் இல்லாத போதும் ஊர்ப்பெரியவர்களின் வாய்வழிக்கதைகள் மூலமாக இது தொன்று தொட்டு வழிபடுகின்ற ஆலயம் என்பது தெளிவாகின்றது.ரம்பகாலத்தில் சிறு ஓலையால் வேயப்பட்ட கொட்டில்களில் பஸ்ரீiஐ வழிபாடுகள் பரம்பரைவழிப் பஸ்ரீசகர்களால் பஸ்ரீiஐ செய்யப்பட்டு வந்தது.
போர் காலத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட இவ்வாலயமானது போருக்கு பின்னரான காலத்தில் சிறிய அளவில் புனரமைப்புச் செய்யப்பட்டடு கும்பாபிசேகம் இடம்பெற்று தற்போது நித்திய பஸ்ரீசை வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் ஆவணிமாதத்தில் பத்து நாள் திருவிழாவோடு சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஆலயத்தின் அன்றாட வழிபாட்டிலும் மற்றும் திருவிழாக்களிலும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பங்கு கொள்வதுடன் ஆலய வழர்ச்சியிலும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply