தம்பகாமம் செருக்கன் சாட்டி அம்மன் வரலாறு

Posted on

by

இவ்வாலயம் நாங்கள் செவிவழியாக அறிந்த வகையில் தம்பகாமத்தில் நிலைபெற்றிருந்த அரசாட்சிக் காலத்தில் இருந்தே இருப்பதாக அறிகின்றோம்.இவ்வாலயத்துடன் உபபக்கேணி பிள்ளையார் ஆலயமும் இணைந்Nது மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது.இரசாட்சிக் காலத்தின் பின்னர் பெரிய கட்டிடத்துடன் காணப்பட்ட உப்புக்கேணி பிள்ளையார் ஆலயம் போர்த்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டதை நாம் செவிவழிச் செய்தியாக அறிகின்றோம்.இவ்வாலய இடிபாடுகளை இன்றும் காணலாம்.


நாம் அறிந்த வகையில் இவ்வாலயத்தினை எமது பரம்பரையினர் சுமார் 500 வருடங்களிற்கு மேல் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவதை அறிகின்றோம்.இடையில் இவ்வாலயத்தை சேர்ந்த பரம்பரையில் ஓர் பகுதியினர் தனியாகப் பிரிந்து வேறோர் இடத்தில் ஆலயம் அமைத்து அதனைப் பேணுகின்றனர்.தொடர்ந்தும் இவ்வாலயத்துடன் இருந்தோர் பரம்பரையினர்பரம்பரை பரம்பரையாக இவ் ஆலயத்தை பேணிப்பாதுகாத்து வருகின்றனர்.இவ் ஆலய பரம்பரையினர் தற்போது வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் ஆலயத் தொண்டாற்றி வருகின்றனர்.


இங்கு கண்ணகை அம்மன்,முத்துமாரி அம்மன் நாகதம்பிரான் போன்ற தெய்வங்கள் மூலமூர்த்தியாகவும் பிள்ளையார் முருகன் காத்தவராயர் வைரவர் போன்ற தெய்வங்களும் நிலைபெற்றுள்ளனர்.ஆரம்பத்தில் கண்ணகை அம்மன் ஆலயமும் நாகதம்பிரான் ஆலயமும் இருந்ததாகவும் இரண்டிற்குமிடையில் முத்துமாரி அம்மன் தோற்றம் பெற்றதாகவும் அறிகின்றோம்.பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பிரதான ஆலயமாக இவ் ஆலயம் அக்காலத்தில் காணப்பட்டதாக அறிகின்றோம்.
ஆரம்ப காலங்களில் பெரிய தம்பகாமம் பகுதியில் மக்கள் செறிந்து வாழ்ந்ததாகவும் அந்நியர் ஆட்சிக்காலத்தின் பின் நோய் காரணமாகவும் வீதியமைப்பு மாற்றம் காரணமாகவும் மக்கள் இடப்பெயர்வு இடம்பெற்றுஇங்கு மக்கள் செறிவு குறைந்ததாகவும் அறிகின்றோம்.பெரிய தம்பகார் கரையோரப்பிரதேசத்தின் ஊடாக முகாவில் கோவில் சந்தைத் தெருவும் மாசார் முகாவில் தெருவும் ஊடறுத்துச் செல்வதனால் மக்களின் ஆரம்ப வாழ்க்கை அமைப்பு ஆலயத்தை சுற்றி மக்கள் வாழ்ந்ததையும் அறிய முடிகின்றது.


இவ் ஆலயம் மருத நிலஅமைப்பில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் 2000-2002,2006-2010 கடும் யுத்த காலப் பகுதியில் ஆலயக்கட்டிடம் கடுமையாக சேதமுற்றது. இருமுறையும் இவ்வாலயப் பரம்பரையினரால் மீண்டும் சீரமைக்கப்பட்டு ஆலயப் பூசைகள் நடைபெற்று வருகின்றது.தற்பொழுது ஆலய உற்சவமாக வைகாசி மாதம் புனர் பூசத்தில் திருவிழாவும் ஆனிமாதம் பௌர்ணமிக்கு முன்னர் உள்ள பூர்வ பக்க செவ்வாய்க்கிழமையில் ஆனிப்பொங்கலும் சிறப்புற நடைபெறுகின்றது.ஆனிப் பொங்கலின் போதே பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வந்த கோவலன் கண்ணகி கதை வரலாறு ஏடு படிக்கப்பட்டு ஒன்பது நாளும் பூசை நடைபெற்று ஒன்பதாவது நாள் ஆனிப் பொங்கல் நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *