இற்றைக்கு 100 ஆண்டுகளிற்கு மேலாக இயக்கச்சி பகுதியில் பனிக்கையடிக் கிராமத்தில் பாலமுருகன் ஆலயமானது அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயமானது முதன் முதலில் தற்போது அமையப் பெற்ற இடத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது ஒரு நாவல் மரத்தின் அடியில் ஒரு வெள்ளி நிறத்திலான வேல் மற்றுமு; ஓரு சிறிய பிள்ளையார்சசிலை அமைப்புடைய கல் ஒன்றும் நிலத்தின் அடியிலிருந்து தோன்றியது. இத் தெய்வத்தினை எடுத்து அன்றிலிருந்து இன்று வரை ஆதரித்து வரப்படுகின்றது.ஆரம்பகாலத்தில் சிறிய குடிசை ஒன்றில் வைக்கப்பட்ட போது சிறிதளவு பூசைகள் செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஓரளவு பெரிதாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.
இவ்வாலயத்தின் சிறப்பினை அறிந்து அயல கிராமத்தவர்களும் வருகைதந்து வழிபடத் தொடங்கினர்.வழிபட்டவர்களது குறைகளினை பாலமுருகன் தீர்த்து வைப்பதனை ஊர் மக்கள் யாவரும் அறிந்ததே. இங்கு யுத்தத்தினால் இடப் பெயர்வுக்கு முன்பு இருந்தே வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெற்று முடியும் தறுவாயில் தன்னை நம்பி வந்த அடியார்களிற்கு பூசாரியாரின் மனைவி கலையாடி ஒவ்வொரு தெய்வங்களாக உருஎடுத்து அடியவருகளின் மனக்குறைகளை நிவர்த்தி செய்வதற்குரிய வாக்கு சொல்லும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் இம்முறையானது இன்றுவரை இக்கோவிலில் இடம்பெற்று வருகின்றமை பாலமுருகனின் அருளினை பறைசாற்றி நிற்கின்றது. தற்போது கோயிலுக்கு நிர்வாகம் அமைக்கப்பட்டு கோயில் புனர் நிர்மாண வேலைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தின் மூர்த்திகளாக முருகன் பிள்ளையார்,சிவலிங்கம்,கண்ணகை அம்மன்,காளி அம்மன்,ஆஞசசேயர்,வைரவர் ஆகிய தெய்வங்கள் அமையப்பெற்று வழிபாடுகள் இடம் பெறுகின்றன. இவ் வாலயத்தில் விசேட பூசைகளாக தைப்பூசம் சிவராத்திரி,பங்குனித்திங்கள்,சிதிதிரைப் பூரணை,வைகாசி விசாகம்,ஆடி அமாவாசை,ஆவணிச்சதுர்த்தி,நவராத்திரி பூசை,கேதாரகௌரி விரதம்,கந்தசஸ்டி விரதம் பிள்ளையார் கதை,திருவெம்பாவை ஐயப்பன் வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. இவ்வாலய வருடாந்த உற்சவம் ஆனது ஆவணி சதுர்;த்தியின் மறுநாள் பொங்கல் விழா நடைபெறும் இங்கு பண்டமெடுத்தல் மடை பரவுதல் காவடி எடுத்தல் போன்ற நிகழ்வுடன் பூசைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தின் பொதுச் சேவைகளாக சிரமதானப் பணிகள் மேற்கொள்ளல் ,அறநெறிப்பாடசாலை,கலாசார நிகழ்வுகள் உடன் வருடாந்தம் பொங்கல் உற்சவத்தின் போது காத்தவராயர் கூத்து இடம்பெற்று வருகின்றது.
Leave a Reply