திராக்கரை முத்துமாரி அம்மன் வரலாறு

Posted on

by

இவ்வாலயம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பளை நகரிலே முல்லையடி கிராமத்தில் 1870 ஆம் ஆண்டுப்பகுதியில் சிறு ஓலைக் கொட்டகைக்குள் இருந்து வாரத்தில் திங்கட்கிழமை,வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பூசை நடைபெற்று வந்தது.முத்துமாரி அம்பாள் அனைத்து மக்களிற்கும் நல்வாழ்வை அருளிக்கொண்டிருக்குமு; சமயத்தில் எமது கிராம மக்களது ஓலைக் குடிசை அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் கல்வீடுகளாக மாற்றியமைக்கப்பட்டன.


இவ்வாறு வீடு அமைக்கப்பட்ட கிராம மக்கள் அம்பாள் சிறு கொட்டகைக்குள் இருப்பதை மனதில் கொண்டு சிறு துளி பெருவெள்ளமாகவும் சிலர் தனியாகவும் தெய்வங்களை ஸ்தாபிப்பதற்கு முன்வந்தனர்.இவ்வாறான செயற்பாட்டிற்கு ஓர் நிர்வாகம் கூட்டப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.


2015 ஆம் ஆண்டு எமது மக்களது ஆதரவுடன் இவ் அம்பாள ஆலயம்; நான்கு மண்டபத்தைக் கொண்டதாகவும் பிள்ளையார்,நாகதம்பிரான் வைரவர்,ஆகிய தெய்வங்கள் தனித்தனியாக கட்டப்பட்டது. இவ்வேலைகள் பூர்த்தி ஆகியதும் 2016 ஆம் ஆண்டு 06 ஆம் மாதம் எமது அம்பாள் அருளால் மக்களின் உதவியுடன் வசந்த மண்டபம் மணிக்கோபுரம் மடப்பள்ளி என்பன அமைக்கப்பட்டு அழகாக காட்சி தருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *