1947 ஆம் ஆண்டு காப்பகுதியில் பச்சிலைப்பள்ளியிலுள்ள சோறர் தோட்டம் எனுமிடத்திலுள்ள காணியை சுப்பர் வேலுப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோர் சீர்ப்படுத்தும் போது அம்மன் சிலையொன்றினை கண்டெடுத்ததாகவும் அதனை கணபதிப்பிள்ளை அவர்கள் தம்பகாமம் செருக்கன்சாட்டி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல சுப்பர் வேலுப்பிள்ளை அவர்கள் அம்மன் சிலை இருந்த மரத்தடி மண்ணை எடுத்து வந்து தனக்குச் சொந்தமான காணியில் இரட்டைக் குளங்கள் அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் தற்போது பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில் செங்கல்லுடன் அம் மண்ணை வைத்து குடிலமைத்து விளக்கு வைத்து வழிபாடு செய்து வந்ததாக செவிவழிக் கதைகள் எடுத்தியம்புகின்றன.
இவ்வாலயத்தில் ஆனி அனுஷத் திருநாளிலே அதிகாலை வளந்து நேரப்பட்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெறுவது ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.
Leave a Reply