கி.பி 1620 காலப்பகுதியில் குலசேகரசிங்கை ஆரியன் என்பவர் வட இலங்கையை ஆண்ட காலத்தில் தனது ஆட்சியின் பாதுகாப்பிற்கும் வலுவிற்குமாக தென்னிந்தியாவிலிருந்து வன்னியர் எனும் இனத்தவர்களை அழைத்து வந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலம் குடும்பம் குடும்பமாக குடியமர்த்தினான். ஆக்காலத்தில் பச்சிலைப்பள்ளி என அழைக்கப்பட்ட பளைப் பிரதேசத்திலும் சில குடும்பங்கள் குடியமர்ந்தனர் அவர்கள் வன்னியமர் என அழைக்கப்பட்டனர்.
இவர் தம் குடும்பத்தில் ஒரு பகுதியினர் புலோப்பளை பிரதேசத்திலும் குடியமர்ந்தனர்.வன்னியமார்கள் பளைப்பிரதேசத்தில் வாழ்ந்த வருகின்ற காலத்தில் ஒரு பிராமணச்சிறுவன் வழியில் தோன்றி தான் ஒர் அனாதையென்றும் தங்குவதற்கு இடமில்லை என்றும் உதவி புரியுமாறு கோரினான்.அச் சிறுவன் மீது இரக்கம் கொண்டு அழைத்த வந்தனர் அச் சிறுவன் பிராமண வம்சமாகையால் தங்கள் இல்லத்தில் தங்க வைப்பது பொருத்தமில்லையென கருதி தமது பராமரிப்பிலுள்ள குளத்திற்கருகிலுள்ள சொந்தக் காணியில் ஒர் ஆலமரம் நின்றது அதன் நிழலின் கீழ் ஒர் குடிசை அமைத்து தங்க வைத்தனர்.உணவிற்கு வேண்டிய வசதிகளையம் செய்து கொடுத்தனர்.பின்பு தமதில்லம் சென்றனர்.
ஆன்றிரவு வன்னிமார்கள் துயில் கொள்ளும் போது அப்பிராமணச் சிறுவன் கனவில் தோன்றி தான் நரசிங்க பைரவர் என்றும் தனக்கு அவ்விடத்தில் (ஆலமரத்திற்கு கீழ் ) கோவிலமைத்து ஆதரிக்கும்படியும் தான் அவர்களது சந்ததியையும் ஊரையம் காத்த அருள் தருவதாகவும் வாக்களித்தார். மேலும் தான் அவ்விடத்திலமர்ந்த ஆனி மாதப் பௌர்ணமி தினத்தில் வருடாந்தம் பொங்கல் செய்யுமாறும் அருளாணையிட்டார்.
Leave a Reply