இந்து சமுத்திரததின் முத்தாம் இலங்கை ஈழத்திருநாட்டில் பசுமையும், செழுமையும் நிறைந்த மண்ணாம் கிளிநொச்சி மாவட்டத்தில், வாய்க்கால் வரம்புகளும், செந்நெல் வயல்களும் பயன்மரங்களும் கொண்ட மருத நிலமாய் மிளிரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் என்னும் ஊரில் மாமர சோலைகளும் மாங்கனிகளும் நிறைந்த மாவடி பகுதியில் 1956 ம் ஆண்டுக் பாலப்குதியில் மார்கழி திருவெம்பாவை தினத்தன்று விநாயகர் சதாசிவம் அவர்களின் கனவில் அம்மன் தோன்றி தன்னை ஆதரிக்குமாறு கூறினார்.
அதை அவர் சம்மந்தர் சிவசம்பு அவர்களிடம் கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து (அல்வா பொன்னையா, செல்லையா கந்தசாமி, சின்னத்தம்பி வீரகத்தி,) ஆகியோர் இணைந்து மாமர அடியில் அம்மனை முருகைகல்லில் வைத்து வழிபாடு செய்தனர். அக்காலத்தில் சதாசிவம் அவர்களே பூசாரியாகவும் இருந்தார். அதன் பிறகு வைத்தியலிங்கம் கண்மணி, தியாகராசா இராசலட்சுமி, ர்புஆ முருகன்பிள்ளை , உழ கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் உதவியாக இருந்து பொதுமக்களினதும் பங்களிப்புடன் ஆலயம் படிப்படியாக சிறப்பாக வளர்ச்சி பெற்றது.
அதன் பிறகு ஆனி உத்தரம், திருவெம்பாவை, வருடாந்த மகோட்சவம் போன்றவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது அத்தோடு மாவடிப்பகுதியிலே அம்பாள் அருள்மிகு மாவடி ஸ்ரீ மாரியம்மன் பெயரோடு அடியவர்கெல்லாம் காட்சி அளித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
Leave a Reply