தம்பகாமத்தில் நிலைபெற்றிருந்த அரசாட்சிக் காலத்திலிருந்தே இவ்வாலயம் இருப்பதாக அறிகின்றோம். இவ்வாலயத்துடன் இணைந்தே மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது. அரசாட்சிக் காலத்தின் பின்னர் பெரிய கட்டிடத்துடன் காணப்பட்ட உப்புக்கேணிப்பிள்ளையார் ஆலயம் போத்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டதை நாம் செவிவழிச் செய்தியாக அறிகின்றோம். இவ்வாலய இடிபாடுகளை இன்றும் காணலாம்.
நாம் அறிந்தவரையில் இவ்வாலயத்தினை எமது பரம்பரையினர் சுமார் 500 வருடங்களிற்கு மேல் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவதை அறிகின்றோம். இடையில் இவ்வாலயத்தை சேர்ந்த பரம்பரையின் ஒர் பகுதியினர் தனியாகப் பிரிந்து வேறொரு இடத்தில் ஆலயம் அமைத்து அதைப் பேணிப்பாதுகாத்து வருகின்றனர்.
Leave a Reply