தேவையான பொருட்கள்:-
நற்சீரகம் 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி ½ தேக்கரண்டி
மஞ்சள் சிறியதுண்டு
வேர்க்கொம்பு சிறியதுண்டு
இஞ்சி சிறியதுண்டு
மிளகு ¼ தேக்கரண்டி
வெந்தயம் ¼ தேக்கரண்டி
வெள்ளைப்பூடு 5 பல்லு
மீன் (சிறிய மீன்) 250 கிராம்
உப்பு அளவாக
தண்ணீர் 2 ½ தம்ளர்
செய்முறை:-
• நற்சீரகம், கொத்தமல்லி, மஞ்சள், வேர்க்கொம்பு, இஞ்சி, மிளகு யாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
• நன்கு அரைபட்டதும் வெள்ளைப்பூடைச் சேர்த்து அரைத்து மிருதுவாக்கியதும் திரணையாக்கிக் கொள்ளவும்.
• மீனைச் சுத்தஞ் செய்து கொள்ளவும்.
• அரைத்த கூட்டைத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து மீனையும், உப்பையும் வெந்தயத்தையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
• மீன் அவிந்து பத்தியம் ஓரளவு இறுக்கமானதும் இறக்கிக் கொள்ளவும்.
Leave a Reply