வல்லியக்கனாக இருந்து மாற்றம் பெற்ற மல்வில் கிருஸ்ணன் ஆலயமானது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திற்கு முற்பட்டது. காத்தற்கடவுளான விஸ்ணுவும் அழித்தற் கடவளான சிவனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகின்றது.மல்வில் குளத்துக்குள் ஒரு கேணியொன்று இருந்ததாகவும் தற்போது அது அழிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதுசுமார் முந்நூறு வருடங்களுக்கு முன் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்ட காலத்தில் ஒருநாள் நடுநிசி நேரத்தில் வித்தியாசமான முறையில் சங்கு ஒலிக்கம் சத்தத்தை பலர் கெட்டனர். இந்த ஒலி எங்கிருந்து வருகின்றது என தெரியாமல் பல மக்கள் குழம்பினர்.
மறுநாள் காலையிலே சங்கொலி கேட்பதை உணர்ந்தனர் அந்தக் காணி சங்குகேணி எனும் பெயரில் மல்வில் கிரஸ்ணன் ஆலயத்திற்கருகாமையில் உள்ளது.
ஆக்கிராமத்தில் வசித்த தானத்தார் எனும் வம்சத்திலுள்ள பெரியார் சோர் புண்ணயிர் என்பவர் அப்போது ஆலயம் அமைந்துள்ள காணியில் சிறு கொட்டில் வைத்த புஸ்ரீஜித்து வந்தார். பின் அவ்விடத்தில் மூலஸ்தானம், மகாமண்டபம், ஆகியவற்றை அமைத்தார்.
ஆவணி மாத புஸ்ரீர்வபக்க பஞ்சமித் திதியில் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி பன்னிரண்டு தினங்கள் இடம் பெறும்.ஆலயத்தின் மகாசமுத்திர தீர்த்தமானது ஆவணி பௌர்ணமி தினத்தன்று வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடலில் சிறப்பாக இடம்பெறும். ஆலயப் பெருமை கூறும் சான்றாக திருமஞ்சக்கிணறு காணப்படுகின்றது. இது முருகைக்கற்களாலும், செங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply