தேவையான பொருட்கள்:-
நற்சீரகம் 2 மேசைக்கரண்டி
மஞ்சள் சிறிய துண்டு
வேர்க்கொம்பு சிறிய துண்டு
இஞ்சி சிறிய துண்டு
மிளகு ¼ தேக்கரண்டி
வெள்ளைப்பூடு 4 பல்லு
முட்டை 2
உப்பு நீர் அளவாக
நல்லெண்ணை தேவையான அளவு
செய்முறை:-
சீரகம் , மஞ்சள், வேர்க் கொம்பு, இஞ்சி , மிளகு, யாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரையல் மிருதுவானதும் வெள்ளைப் பூடைச் சேர்த்து அரைத்துத் திரணையாக்கிக் கொள்ளவும்.
அரைத்த சீரகக் கூட்டுடன் முட்டையையும் உப்பையும் சேர்த்து கலவை ஒன்று சேரும்படி பிசைந்து கொள்ளவும்.(கலவை கூழ்ப்பதமாக வரும்)
நன்றாகக் கொதித்த நல்லெண்ணையில் ஒரு மேசைக்கரண்டி கலவையை விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகும் படி புரட்டி விட்டுப் பொரித்து எடுக்கவும்.(மெல்லிய நெருப்பில்).
Leave a Reply