
ஞானிமடம் பூநகரியை பிறப்பிடமாகவும் 5ம் கட்டை பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை செல்வராசாவாகிய இவர் ஆரம்ப கல்வியை ஞானிமடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பூநகரி மத்திய கல்லூரியிலும் பயின்றார். பாடசாலைக் காலங்களில் கலைத்தறையின் பால் ஈடுபாடு கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக நாடகம் நடிப்பதிலும் எழுத்து ஆக்கம் செய்வதிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலயங்களில் தேவாரம் படித்தல். மரண வீடுகளில் சுண்ணப்பாட்டுப்பாடுதல், பட்டிமன்றம் செய்தல்,ஆலயங்களில் கூட்டுப்பிராத்தனை செய்தல் போன்ற பல ஆக்கங்களையும் நாடகங்களையும் நடித்து வருகின்றார்.
இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2025 ம் ஆண்டு பிரதேச கலாசாரப்பேரவையினால் கலைநகரி எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர்; தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply