
புகைப்படத் துறையில் 2016 ஆம் ஆண்டுதொடக்கம் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற மணிதாஸ் சுகின் 2016ம் ஆண்டு பயிற்சி ஒளிப்பதிவாளராக இந்த பயணத்தை ஆரம்பித்து குறும்படம் இசைக்கானொளியில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாறியுள்ளார் .பின்னரான காலப்பகுதியில் சுயாதீன புகைப்படக்கலைஞராக புகைப்படங்கள் மூலம் தனது சமூகம் சார்ந்த கதைகளை உலகறிய செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இணையவழி கதைகூறல் மூலம் பூநகரியின் வரலாற்று சின்னங்கள் மற்றும் பூநகரியின் வாழ்வியல் என்ற தலைப்பில் புகைப்படக்கட்டுரை ஒன்றை செய்து பூநகரி பற்றி தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.
பூநகரியின் மண் சார்ந்தத கவல்களை புகைப்படக்கலையின் மூலம் உலகறியச் செய்வதையும் ஆவணப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றார். இவரது கலைச்சேவையை பாராட்டி 2023 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply