திரு. சின்னத்துறை .கௌரிபாலன்

Posted on

by

கிராஞ்சியில் வசிக்கும் சின்னத்துரை கௌரிபாலன் ஆகிய இவர் 1965.07.02 ஆம் ஆண்டு பூநகரி தம்பிராய் என்னும் ஊரில் பிறந்தார். தனது ஆரம்பகல்வியினை தம்பிராய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். தனது சிறுவயது முதல் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை கேட்டும் ரசித்தும் பாடுவார்.

தனது மாமனார் ஞானிமடத்தில் வசித்து வந்தார். மிருதங்கம் வாசிக்கும் திறமை கொண்டவர். ஆகையால் அவர் மிருதங்கம் வாசிக்கும் போது தானும் பாடல்களை பாடுவதாக குறிப்பிட்டார். சிறுவயதிலிருந்தே பாடல்களைப்பாடி வருகின்றார். தனது பாடசாலையில் தரம் 05 வரைதான் உள்ளதால் தரம் 06 தொடக்கம் க.பொ.த சாதாரணதரம் வரை பூநகரி மகா வித்தியாலயத்தில் கற்றார்.

சங்கீத ஆசிரியை தனது பாட்டுத்திறமையை அறிந்து என்னை பாடல்களை பாடச் சொல்லி ஆர்வப்படுத்தினார். அத்துடன் பாடசாலையில் நடைபெறும் மாணவர் மன்றம், சரஸ்வதிபூஜை, ஆசிரியர் தினம், சிறுவர் தினம் என்று அனைத்து நிகழ்வுகளிலும் எனது பாடல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறே தனது கல்வியை சாதாரண தரத்துடன் முடித்துக் கொண்டார். அத்துடன் கலைநிகழ்வுகள் நடைபெறும் இடங்களிலும் பாடல்களை பாடி பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றக்கொண்டார்.. தனது கல்வியின் பின் பூநகரி பனை தென்னைவளஅபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் கிளை முகாமையாளராக பணிபுரிந்தார்.;.;. அங்கு நடைபெறம் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கூட்டுறவுதினவிழா போன்ற நிகழ்வுகளிலும் பாடுவார்;. தனது பாடும் பாடல்களை தனது பிள்ளைகளின் உதவியுடன் ளு.புழறசைியடயெ ளைபெநச 1999 எனும் லுழரவரடிநதளத்தில் பதிவேற்றமும் செய்து கொண்டிருக்கின்றார். அத்துடன் 1986ம் ஆண்டுஓர் நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்தார் இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *