
ஜெயபுரம் தெற்கு பல்லவராயன் கட்டு பூநகரியைத் தன்னுடைய வசிப்பிடமாகக் கொண்ட உயர்.திரு.கோ.அரியநாயகம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.கல்வியில் இயல்பாகவே ஆற்றல் கொண்டவரான இவர் சிறுவயது முதல் புராண படலம் ஓதுவதில் அக்கறை கொண்டவாரகவும் ஆலய வழிபாட்டில் தீவிரம் காட்டுபவராகவும் இருந்தார்.இதனால் இவர் பிறந்த இடமான செம்பியன் பற்றிலுள்ள ஆலயங்களில் பிள்ளையார் புராணம்,கந்தபுராணம்,சிவராத்திரிபுராணம், திருவாதவூரடிகள் புராணம்,கோவலன் கண்ணகி கதை படித்தல் போன்ற புராணபடன மரபில் ஓதுபவராகவும் திருவசாசகம் முற்றோதல் செய்பவராகவும் திகழ்ந்துள்ளார்.
ஆலயங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டதாலோ என்னவோ அசைவ உணவுகளை மறுத்து சைவ போ~னத்தை ஏற்கப் பழகினார்
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் இரண்ட வருடம் கல்வி கற்ற காலப்பகுதியில் சமய தீட்சை பெற்றார் சமய இலக்கியம்,தமிழ் இலக்கியம் என்பவற்றை செ.சிவப்பிரகாசம் பண்டிதர் ஜயா அவர்களிடம் முறையாகக் கற்ற இவர் இதனால் புராணங்களுக்குப்பயன் சொல்லும் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஜாதகம் கணித்தல்,எழுதுதல் என்பவற்றை சமய சாஸ்திர புத்தகங்களைக் கற்றதன் வாயிலாக அறிந்து கொண்ட இவர் பின்னாளில் தன்னை ஓர் பிரசங்கியாக மாற்றிக்கொண்டார். 1979ம் ஆண்டு அரசசேவையில் இணைந்து கொண்ட இவர் 1979 ம் ஆண்டு பூநகரியில் திருமணம் செய்து கொண்ட இவர் பிற்காலத்தில் தனது உத்தியோகத்துக்கு ஏற்ற வகையில் எண்ணிட முடியாத பல சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார்.
சமூகப்பணி,சமயப்பணி என தன் வாழ்வில் ஓர் அக்கறை கொண்ட மனிதனாக இவர் தற்பொழது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று ஜெயபுரம் முருகன் ஆலய பரிபாலன சபையின் தலைவராக இருந்து கொண்டு ஓதுபவராக,சமய பௌராணிகராக,சொற்பொழிவாளனாக தன் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2013 ம் ஆண்டு பிரதேச கலாசாரப்பேரவையினால் கலைநகரி எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர்; தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply