
பண்டார வன்னியன் ஆண்ட பூமியாம் வன்னி மண்ணில் வவுனியா மாவட்டம் புளியங்குளம் பழைய வாடியில் 1994 ம் ஆண்டு சித்திரை மாதம் 08ம் திகதி இராமச்சந்திரன் திருக்குமரன் பிறந்தார். இவர் தனது கற்றல் செயற்பாட்டுக்காக தனது தந்தையின் பூர்வீக இடமான சோழர்களால் ஜனநாத மங்கலம் எனப் போற்றப்பட்ட சோழர்கள் ஆண்ட பூமி பொலனறுவை மன்னம்பிட்டி தமிழ் மகாவித்தியாலயத்தில கல்வி கற்றார். பாடசாலை காலங்களில் நாடகத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மாணவ மன்றங்களில் நாடகங்களை மேடையேற்றினார்.
இவ்வாறு நாடகத்தால் ஈர்க்கப்பட்ட இவர் கிழக்குப்பலகலைக்கழகம் வரை சென்று நாடகத்துறையை சிறப்புப் பாடமாக கற்ற பட்டதாரியும் ஆவார்.
தேசிய அரச நாடக விழா, தேசிய இளைஞர் நாடக விழா போன்றவற்றில் பங்குபற்றி தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு தொடக்கம் தற்காலம் வரை 50இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் 100இற்கும் மேற்பட்ட வீதி நாடகங்களிலும் நடித்துள்ளார். அத்தோடு 12இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். குறுந்திரைப்படங்களில் நடித்தும் மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள்,யுவதிகளை ஒன்று திரட்டியும் நெறியாள்கை செய்துள்ளார். மேலும் மேடை ஒப்பனையாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இசையாளராகவும் பன்முக நாடக சிந்தனையுடன் தற்காலம் வரை செயற்பட்டு வருகின்றார். இவரது கலைச் சேவையைப் பாராட்டி éநகரி பிரதேச செயலகத்தால் 2025 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply