திரு.இரத்தினசிங்கம் பார்த்தீபன்

Posted on

by


1985ம் ஆண்டு 2ம் மாதம் 23ம் திகதி இரத்தினசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளுக்கு இளையமகனாக பூநகரி கறுக்காய்த்தீவு மண்ணில் பிறந்த இரத்தினசிங்கம் பார்த்தீபன் ஆகிய இவர் 1991ம் ஆண்டு பூநகரியின் இடப்பெயர்வின் பின்னர் பூநகரி பல்லவராயன்கட்டு பகுதியில் வசித்துவருகின்றார்.

ஆரம்பக்கல்விமுதல் உயர்தரகல்விவரைகிளிஃபூநகரிமகாவித்தியாலயத்தில் கல்விகற்ற இவர் பாடசாலைக் காலங்களில் அமரத்துவம் அடைந்த சின்னத்தம்பிவிசுவாசம் ஆசிரியரின் நெறியாள்கையின் கீழ் மணிமகுடம், அடங்காப்பற்றன், பண்டாரவன்னியன், எருசலேம் நகர் சோழப்போர் மறவன், தாயுமானவன் போன்ற வரலாற்று நாடகங்கள் பலவற்றில் பிரதானவில்லன் மற்றும் துணைவில்லன் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்;. அத்துடன் கிராமியநாடகங்கள், கருத்து வெளிப்பாடு நாடகங்கள் பலவற்றிலும் பிரதான பாத்திரமேற்று நடித்திருந்தார்..
2004 ம் ஆண்டு உயர்கல்வியை நிறைவுசெய்து 2005ம் ஆண்டுயாழ்ப்பாணபல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சித்திரமும் வடிவமைப்புத்துறைகற்கைநெறிக்குதெரிவாகி 1ம் வருடக் கற்கைநெறியைபூர்த்திசெய்தகாலத்தில்நாட்டில்ஏற்பட்டஅசாதாரணசூழ்நிலைகாரணமாக குறிப்பிடப்பட்ட காலம் கற்கைநெறியினை இடைநிறுத்தி 2010ம் ஆண்டு தனது கற்கைநெறியினைமீண்டும் ஆரம்பித்தார்.


அக்காலப்பகுதியில் அநேகமான அவரது ஓவியங்கள் எமதுமக்களின் துன்பியல்களைசித்தரித்தவையாககாணப்பட்டன. அத்துடன் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளில் பாடல்கள்,நடனநிகழ்வுகளிலும் பங்கெடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


பல்கலைக்கழககல்வியை 2013ம ;ஆண்டு பூர்த்திசெய்து நுண்கலைமாணி பட்டத்தினை பெற்றிருந்தார். பல்கலைக்கழககல்வியை நிறைவுசெய்த பின்னர் கிராமத்தில் நடைபெற்றநிகழ்வுகளில் வரலாற்றுநாடகங்கள் ஏனைய கலைத்துறைகளிலும் பங்கெடுத்திருந்தார் மேலும் ,ஈழத்துசினிமாவில் குறும்பாடல்கள்,குறும்படங்கள் போன்றவற்றில் பிரதான பாத்திரமேற்று நடித்ததுடன் கதை,வசனம், இயக்கம் போன்றவற்றையும் மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில் காந்தாரி,லத்தி,திருநங்கை,அறுவடை,சண்டியன்,அறியாமைபோன்றபடைப்புக்களைகுறிப்பிட முடியும். இவரது கலைச்சேவையை பாராட்டி 2025 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *