சரக்குத் தூள்

Posted on

by

தேவையான பொருட்கள்:

செத்தல் மிளகாய் – 150 பி

பெருஞ்சீரகம் – 2 மே.க

மிளகு – ½ தே.க

கறிவேப்பிலை – 3 அலக்குகள்

ஏலக்காய் – 4

கறுவாத்துண்டுகள் – 1 தே.க


செய்முறை:

  • எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்து, கழுவி, காய வைத்து எடுக்கவும்.
  • மிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
  • பெருஞ்சீரகம், மிளகு இவற்றை தாச்சியில் இட்டு, அதன் மேல் மிளகாயை இட்டு வறுக்கவும்.
  • இடையிடையே கறிவேப்பிலை, கறுவா, ஏலம் இவற்றையும் சேர்த்து வாசனை வரக்கூடியதாக வறுத்துப் பொன்னிறமாகியதும் இறக்கிக் கொள்ளவும்.
  • பின் ஆறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.


    இது மணம்கமழும், சுவையான சரக்குத் தூள். உணவில் அல்லது குழம்புகளில் சுவையை கூட்ட பயன்படுத்தலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *