திரு.ஆனந்தகுமார் சுதர்சன்

Posted on

by

இலங்கையின் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தகுமார் சுதர்சன் 13.01.1990 ஆம் ஆண்டு ஆனந்தகுமார் சிவமணி ஆகியோரின் மகனாக பிறந்தார். அத்தோடு இவர் பாடசாலைக் காலத்திலும் பாடசாலைமட்டம்,கோட்டமட்டம் முதலிய பிரிவுகளில் கலைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார்.

பாடசாலைக் காலத்தின் பின்னர் 2007 ம் ஆண்டு வர்ண கலையை தனது பிரதான தொழிலாக தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி பல பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தனது கலையாற்றலால் பல்வேறு சிறப்பு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அந்த வகையில் 2023 ம் ஆண்டு |குமுழமுனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தால் “தூரிகை வேந்தன்” எனும் பட்டமும் 2022 ஆம் ஆண்டு முழங்காவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தால் “ஓவியமானி” பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பல நூற்றுக்கணக்கான ஆலயங்களில் “சுதர்மன் ஆட்ஸ்” எனும் பெயரில் இன்றும் மிளிர்ந்த வண்ணம் காணப்படுகின்றார்.


அத்தோடு இவர் தன்னுடைய பல்வகைத்திறன்கள் காரணமாக பல தேசிய விருதுகளை தன் வசமாக்கிக் கொண்டார். 2014 ஆண்டு இலங்கை இந்திய நட்புறவு சங்கம் ஸ்ரீ விக்கிரம கீர்த்தி விருது, 2016 ஆண்டு இலங்கை முதலுதவிச்சங்கம் தேசிய விருது,2023ம் ஆண்டு இலங்கை மலையக குருமார் ஒன்றியம் ஆண்மீக விருது.கிடைக்கப்பெற்றது. இவரது கலைச்சேவையை பாராட்டி 2025 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *