திரு. முத்து குணநாதன்

Posted on

by

muthu

கிராஞ்சியில் வசித்துவரும் முத்துகுணநாதன் ஆகிய இவர் 1949.03.21 ம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பகல்வியினை யாஃகோண்டாவில் சேர்ச்மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றார்;. சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டஇவர்; முதன் முறையாக 12 வயதில் பாடசாலையில் பாடஆரம்பித்தார் . சவுந்தரராயனின் பாடல்களில் அதிகளவுவிருப்பம் கொண்டு தனது பாடல் திறமையைவளர்த்துக் கொண்டார்.

பின்னர் யோகபுரம் மல்லாவியில் தற்காலிகமாகவசித்துவந்தவேலையில் அருள்தாசின் தயாரிப்பில் அரங்கேற்றிய நாடகமான ( உள்ளத்தால் உயர்ந்தவன் ) என்னும் நாடகத்தில் அவரது குரலில் பாடல்களைபாடிஉள்ளார்.; அவை மட்டுமல்லாது பலஅரங்கேற்ற நிகழ்வுகளிலும் தனது பாடல்களைபாடியுள்ளார்.

அப்போது நிரந்தரமாக பூநகரி கிராஞ்சி கிராமத்தில் நிரந்தரமாகவசித்துவரும் இ;வர் இங்கு பல பாடல்களை பாடியுள்ளமையால் (கவிக்குயில்) என்னும் பெயரால் அழைக்கப்பட்டார். அவற்றோடு கிராஞ்சி பண்பாட்டு இசைக்குழுவில் மூத்த பாடகராக உள்ளார்.; கிராஞ்சியில் நடைபெறும் பலகலைநிகழ்வுகளில் பலபாடல்களைபாடியுள்ளார். இன்றுவரையும் இசைக்கச்சேரிகளிலும் பாடல்களை பாடிவருகின்றார் .அண்மையில் இவரது பாடல்கள் ஒன்று பதிவுசெய்து நிறுவனம் ஒன்றுசமூகவலைத் தளத்தில் அவர் பாடிய பாடல்களை பாடி பாராட்டுக்களை பெற்றுள்ளார். இது அவருக்கு திறமைக்குகிடைத்தஅங்கீகாரமாகும் .

அவர் தனது திறமைகளை வெளிக்காட்டுவதால் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கிராமமக்களும் ஊக்கமளித்துள்ளனர். இன்றுவரையும் அவரது பாடல்களை பாடிவருகின்றார். இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *