ரகு என அழைக்கப்படும் செல்லையா கணேசநாதன் 1960.02.22 யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்தவர் தற்போது இரத்தினபுரத்தில் வசித்துவரும் இவரை பெரும்பாலானவருக்கு தெரியும்.நாடக இயக்குநர்,சிறந்த நடிகர்,குறும்பட இயக்குநர்,கதாசிரியர் என பன்முக ஆளுமை நிறைந்த இவரது நாடகங்கள் போருக்கு முன்னர் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்ததுடன் தற்போது கலாலயம் மன்றத்துடன் இணைந்த வகையில் பல்வேறு பட்ட கோணங்களில் நாடகங்களை படைத்து வரும் இவரது நாடகங்கள் நகைச்சுவை ,தத்துவார்த்தம் நிறைந்தவை.இசையும் கதையும் இவரது உன்னத படைப்பாகும்.
இந்த உயரிய கலைஞனை பாராட்டும் முகமாக கரைச்சி பிரதேச செயலகம் கரைஎழில் விருது (2016)கிளிநொச்சி மாவட்டச்செயலகம் கலைக்கிளி (2023) வழங்கி கௌரவித்திருந்தது.
2024 கரைச்சி பிரதேச செயலக கலாசார விழாவில் இக்கலைஞனை மீளவும் மேடையேற்றி பொற்கிளி வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஈழத்தின் புகழ்பூத்த உயரிய கலைஞனின் ஆவணங்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளில் தொலைந்து விட்டது.
Leave a Reply