மட்டக்களப்பில் பிறந்த யோகேஸ்வரன் (மலையவன்) தற்போது கிளிநொச்சி பன்னங்கண்டியில் வசித்து வருகின்றார். ஒளிப்பதிவு துறையில் ஈழத்தின் புகழ்பெற்ற ஒருவர்.குறும்படங்கள்,ஆவணப்படங்கள்,பாடல்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
இவரது இரணைமடுத்தாய்,முழங்காவில் வைகுந்த கீதங்கள்,அகஒளி பாடல் இறுவட்டு,ஆல் விருட்சமானவளே,நாகதம்பிரான் புகழ்மாலை,தெய்வீக கானங்கள்,வளையல் கரங்கள் என நீண்டு செல்லும் இவரது கலைச்சேவைதனை பாராட்டி கரைச்சி பிரதேச சபை கலைஞர் கௌரவிப்பினை வழங்கியதுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் கலைக்கிளி விருது வழங்கி கௌரவித்திருந்தது.
பல்வேறு பத்திரிகைகள் இவரது நேர்காணல்களை வெளியிட்டிருந்ததுடன் தற்போதும் ஒளிப்பதிவு துறையில் ஈடுபட்டு வருகின்றார்.
Leave a Reply