கண்டி தெல்தெனியாவில் 1957.12.28 இல் பிறந்த இவர் தற்போது பாரதிபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார்.அறநெறி ஆசிரியரும் கிராமிய கலையில் ஈடுபாடு கொண்டு செயற்படும் மூத்த கலைஞரான விஜயதர்சினி 1990 களில் இருந்து நடனம்,நாடகம்,கிராமியக்கலைகள் என்பவற்றினை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.கரகம்,கோலாட்டம்,கும்மி,ஒயிலாட்டம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் மூத்த கலைஞரின் கலைச்சேவையினை பாராட்டி கரைச்சி பிரதேச செயலக கலாசார பேரவை கரைஎழில் விருது (2024) வழங்கி கௌரவித்திருந்தது.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாதாந்த கலைஞர் கொடுப்பனவினை வழங்கி வருகின்றது. 34 வருட கலைச்சேவையாற்றிருக்கின்றார்.
திருமதி வீரபாகுப்பிள்ளை விஜயதர்சினி
Posted on
by
Leave a Reply