மீசாலை யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர். கிளிநொச்சியில் தற்போது வசித்து வருகின்றார்.இசையில் கொண்ட ஆர்வத்தினால் இன்று வளர்ந்து வரும் இசையமைப்பாளராகவும்,வாத்தியக்கருவிகளை கற்பிக்கின்ற ஆசானாகவும் இருக்கின்றார்.
பக்திப்பாடல்கள்,கிராமிய பாடல்கள்,தத்துவப்பாடல்கள் என பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
கிராம மட்ட அமைப்புக்களால் இசைக்கோ விருது,ஈழத்தின் இசைச்சிற்பி,இசைக்குயில்,ஈழத்தின் இசைத்தென்றல்.ஈழத்தின் இசையருவி,கௌரவபட்டம் என பெற்றுக்கொண்டதுடன் பல்வேறு இசை மேடைகளில் பாராட்டுதல்களும் பெற்றுள்ளார்.
கரைச்சி பிரதேச செயலகம் இசைத்துறையில் ஆற்றிய கலைப்பங்களிப்புக்காக கரை எழில் விருது வழங்கி கௌரவித்திருந்தது. இசைப்பயணத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் இவர் கரைச்சி பிரதேச கலாசாரப்பேரவை பொருளாளராக இருப்பதுடன் பல்வேறு பட்ட பிரதேச மாவட்ட செயலக நிகழ்வுகளில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
Leave a Reply