நாட்டுக்கூத்து,இசைநாடகம்,வீதி நாடகங்கள் போன்றவற்றின் நடிகனாகவும் நெறியாள்கனாவும் அண்ணாவியாராகவும் இருக்கின்ற திரு.வே.சவுந்தரராசா அவர்கள் 1957.05.18 ஆந் திகதி யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கரம்பொன் கிராமத்தில் பிறந்தவர். தற்போது கோணாவில் கிழக்கில் வசித்து வருகின்ற இவர் தன்னுடைய பிரதேசத்தில் கலைமன்றம் ஒன்று இல்லாமையினால் ஊர்காவற்றுறை தம்பாட்டி காந்திஜி நாடக மன்றத்துடன் இணைந்து கலைப்பணி செய்வதுடன் கிளிநொச்சி மண்ணில் இருக்கின்ற மன்றங்களுக்கு நாடக ஆலோசணைகளை வழங்கி வருவதுடன் மாவட்ட,பிரதேச கலாசார விழாக்களிலும் கலந்துரையாடல்களிலும் தவறாது கலந்து கொள்ளும் மூத்த கலைஞர் ஆவார்.
பத்து வயதில் பிச்சைக்கார குடும்பம் எனும் நாடகத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து புரோக்கர் பொன்னையா,சிவந்த மண்,பண்டார வன்னியன்,இராஜஇராஜசோழன்,காத்தவராயன்,கதைபேசும்,அரிச்சந்திரா என இவர் நடித்த நாடகங்களும் நெறியாள்கை செய்தமையும் நீண்டுகொண்டே செல்லும். கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றும் இம் மூத்தகலைஞரை ஊர்காவற்றுறை பிரதேச கலாசார பேரவை கலை விழுது (2016) வழங்கி கௌரவித்திருந்தது.
கிளிநொச்சி மண்ணில் இசைநாடகத்துறைக்கு ஆற்றிய அளப்பெரும் சேவைக்காக கிளிநொச்சி மாவட்டச்செயலக கலாசார பேரவை கலைக்கிளிவிருது (2024) மாவட்ட விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.நடிப்பு,நாடக உருவாக்கம் என ஆளுமை கொண்ட இக்கலைஞருக்கு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாதாந்த கலைஞர் கொடுப்பனவினை 2025 இல் இருந்து வழங்கி வருகிறது.
Leave a Reply