கிளிநொச்சி கணேசபுரத்தில் 1947.05.25 இல் பிறந்த இவர் புனித திரேசாள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டதுடன் முத்தமிழ் நாடகமன்றம்,கலைமகள் மன்றம் போன்ற நாடக மன்றங்களில் இணைந்து நாடகங்களை நடித்துவரும் மூத்த கலைஞர் ஆவார்.வீரபாண்டிய கட்டபொம்மன்,பாண்டியன்,பாஞ்சாலி போன்ற வரலாற்று நாடகங்களிலும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வீதி நாடகங்களிலும் நடித்து வருகின்ற இக்கலைஞர் கரைச்சி பிரதேச செயலக கௌரவிப்புகளையும் பிரதேச சபை கலைஞர் கௌரவிப்பினையும் பெற்றுக்கொண்டதுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாதாந்த உதவித்திட்டத்தினையும் பெற்றுவருகின்றார்.
கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவை உறுப்பினராக இருக்கும் இவர் ஆக்கபூர்மான கலைச்செயற்பாடுகளை உடல் நிலை இயலாத சந்தர்ப்பத்திலும் ஆற்றி வருகின்றார்.கௌரவிப்பினையும் பெற்றுள்ளார்.மாவட்ட மட்ட சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதை பல முதலிடங்களை பெற்றவை குறிப்பிடத்தக்கது.
</p>
Leave a Reply