திரு.சாந்தகுமார் வினோத்

Posted on

by

யாழ்ப்பாணத்தில் 1986.12.22 ஆந் திகதி பிறந்த இவர் தற்போது வட்டக்கச்சியில் வசித்து வருகின்றார்.இலக்கிய துறையில் செயற்பட்டு வரும் இவர் வட்டகச்சி வினோத் எனும் பெயரில் கவிதைகள் எழுதி வருகின்றார்.இவரது தொகுப்புக்களான காலநதி,வேர்கள் வான்நோக்கின் என்பவை வெளிவந்து பாராட்டுப்பெற்றவை கவியரங்கம்,கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டுவரும் கலைஞனின் கலைச்சேவையினை பாராட்டி கரைச்சி கலாசார பேரவை கரைஎழில் விருது (2024) வழங்கி கௌரவித்திருந்தது.

கரைச்சி பிரதேச சபை கலைஞர் கௌரவிப்பினையும் பெற்றுக்கொண்டதுடன் கலாரத்னவிபூசன்,கவிக்கேசரி,அப்துல்கலாம் விருது போன்ற கிராம மட்ட கலைநிறுவன விருதுகளையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *