பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவில் புலோப்பளையில் வசித்துவரும் கலைஞரான இவர் சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். கவிதை துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கலாசார அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் கவிதைப்பயிற்சிப்பட்டறைகளை நடாத்தி பல இளம் கவிஞர்கள் உருவாக வழி வகுத்துள்ளார்.
இவர் 2 கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு “கனவுகளின் புலர்வு” என்ற கவிதை நூலையும் 2016 ஆம் ஆண்டு “வளிதேடும் புல்லாங்குழல்” என்ற கவிதை நூலையும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் அகரம் கவின் கலைக் கலாமன்றத்ததை உருவாக்கி அதனூடாக கலைச் செயற்பாட்டை செய்து வருகின்றார்.
2018 ஆம் ஆண்டு தேசிய கலை இலக்கியப்போட்டி (பாடலாக்கம்) திறந்த பிரிவில் தேசிய ரீதியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மன்றத்தால் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
பிரதேச மட்ட மாவட்ட கலாசார பேரவையாலும் கலாசாரப் பேரவையாலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுககையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றார்.
மேலும் 2016ஆம் ஆண்டு மாவட்ட பண்பாட்டு பேரவையால் இளம்கலைஞர் விருதும் 2019 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மள்றத்தினரால் தேசிய இளைஞர் விருதும் வழங்கப்பட்டது. இவரது கலைச்சேலையை கௌரவிக்குமுகமாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தாலும் பச்சிலைப்பள்ளி கலாசாரப் பேரவையாலும் 2023 ஆம் ஆண்டு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply