தர்மக்கேணி
இராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 1963.02.06 ஆம் திகதி தர்மக்கேணியில் பிறந்த இவர் பூதவராயர் கலாமன்றத்துடன் இணைந்து செயற்படும் ஒருவராவார். தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கற்ற இவர் பாடசாலை மட்ட பல கலைப் போட்டிகளில் பங்குபற்றி தற்போது பச்சிலைப்பள்ளியில் பெயர் சொல்லும் கலைஞராக திகழ்ந்து வருகின்றார்.
தனது பத்தாவது வயதில் அரிச்சந்திர மயான காண்டத்தில் லோகிதாசனாகவும் காத்தவராயன் கூத்தில் பாலகாத்தானகாவும் நடித்து அனைவரதும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து சத்தியவான் சாவித்திரி அல்லி அர்ச்சுனா, சமூக நாடகங்கள் சமூக சீர்திருத்த நாகங்கள,; இசைநாடகங்களிலும் நடித்து வருவதுடன் அண்ணாவியாராகவம் பல கலைஞர்களை நெறிப்படுத்தி வருகின்றார்.
தொடந்து தற்போது பிரதேசத்தின் நாடகங்களை இளங்கலைஞர்களுக்கு பழக்குவதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார். தனது கலைப்பணிக்கு முன்னுதாரணமான குரு என கலாபூசணம் செல்லையா .சுந்தரம்பிள்ளை அவர்களே காரணம் என கூறுகின்றார்.பச்சிலைப்பள்ளி கலாசார பேரவையுடன் இணைந்து இவரது செயற்பாடுகள் பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் இன்றும் சிறந்த பணிகளை செய்து வருகின்றார். இவரது கலைப்பணியை பாராட்டி பிரதேச செயலகத்தால் கலைத்தென்றல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply