சின்னத்தாளையடி , தர்மக்கேணி-நாடகம்
1984.11.16 இல் பிறந்த இவர் பச்சிலைப்பள்ளி சின்னத்தாளையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்.இவர் ஆரம்பக்கல்வியை கிளி தர்மக்கேணி அ.த.க பாடசாலையிலும் உயர் கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார்.
தனது கலைப்பயணத்தை நினைவு தெரிந்த நாளில் இருந்தே பார்த்தல், கேட்டல் என ரசனைகளை ரசித்தும் நடித்தும் வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தில் காத்தவராயன் கூத்தில் காத்தான், சின்னான், தேவரடியான,; முத்துமாரி மற்றும் ஆரியப்பூமாலை, நாரதர் போன்ற பாத்திரங்களிலும் சத்தியவான் சாவித்திரியில் சாவித்திரியாகவும் அரிச்சந்திரா மயான கண்டத்தில் காளகாண்ட ஐயருக்கும் கோவலன் கண்ணகை நாடகத்தில் கண்ணகிக்கும் நடித்திருக்கிறார்;. அத்தோடு வில்லுப்பாட்டுகளும் மேடையேற்றம் செய்து இருக்கிறார். மாற்றுத்திறனாளியான இவர் பிரதேச மாவட்ட மட்ட போட்டிகளில் நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திருக்கிறார். இசைக்கருவிகள் கற்க விருப்பம் உள்ளதால் தனக்கு கிடைக்கின்ற நேரங்களில் தியாகராசா அண்ணாவியாரிடம் ஆர்மோனியம் கற்று வருகின்றார்.
மேலும் இவர் அறநெறி பாடசாலையில் 15 வருடத்துக்கும் மேலாக பொறுப்பாசிரியராக உன்னதமான பங்களிப்பினையும் அற்பணிப்பான சேவையினையும் ஆற்றி வருகின்றார். இவரது அர்ப்பணிப்பான சேவையினைக் கௌைவித்து 2021இல் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் சிறந்த அறநெறி ஆசிரியருக்கான “தேசிய மேன்மை வருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவரது கலைப்பணியை பாராட்டி 2023 ஆம் ஆண்டு பச்சிலைப்பள்ளி கலாசாரப் பேரவையினாலும் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மாவட்ட பண்பாட்டுப் பேரவையாலும் இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Leave a Reply