வண்ணாங்கேணி வடக்கு
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1947.03.01 ஆம் திகதி பிறந்த இவர் சீன் சந்திரன் என அழைக்கப்படுகின்றார். தனது அரம்பக் கல்வியை பளை மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டதுடன் தந்தையாரின் ஒப்பனைக் கலையை சிறு வயதிலிருந்தே பழகி தொடர்ந்து வந்தார். இவரது தந்தையர் சீன் செல்லையா என அழைக்கப்படுபவர் கலாபூசணம் விழுதினைப் பெற்றவராவர் அளவெட்டி ஐயாத்துரை அவர்களுடன் ஒப்பனைக் கலை தொடர்பாக முகச்சுருக்கங்கள் தொடர்பான பயிற்சிகளை இவரிடம் பெற்றிருந்தார்.
நடிகமணி வைரமுத்து, நற்குணம், ஐஸ்கின், சின்னமணி போன்ற நடிப்புக் கலை விற்பனர்கள் பலருக்கு இவர் ஒப்பனைக் கலைஞராக திகழ்ந்ததுடன் இவரின் திறமைகளை நாம் அளவிடக் கூடியதாக உள்ளது.
இவரது தொடர்ச்சியான பணியுடன் 1984 ஆம் ஆண்டு ரூபவாகினி கூட்டுத்தாபன நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த ஒப்பனை கலைஞராக தேர்வு செய்யப்பட்டார்.
இவரது கலைப்பணியை பாராட்டி பிரதேச செயலகத்தால் கலைத்தென்றல் விருதும்,மாவட்ட மட்டத்தில் கலைக்கிளி விருதும், மாகாணத்தில் முதலமைச்சர் விருதுமு; தேசிய அளவில் கலாபூசண விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply