
பூநகரி பிரதேசத்தில் மன்னர் வீதியை குறுக்காகச் செல்லும் மண்டகல்லாறு எனும் இடத்திலிருந்து வடகிழக்கு மூலையாக 4 மைல் தொலைவில் காடும் குளமும் கொண்ட பக்தர்கள் கூடி பொங்கல் செய்து வழிபடும் இடமே பத்தினிப்பாய் ஆகும். இவ்வாலயத்தில் பிள்ளையார், முருகன், அம்மன் எனும் பிரதான தெய்வங்களுடன் வைரவர், முனி, ஐயனார், விறுமர், காளி, கன்னிமார் என்னும் 6 கொல்லைகள் அமைக்கப்பட்டு தெய்வங்களும் இவ்வாலயத்தில் உண்டு.
இத்தெய்வங்களுக்கு வளந்து வைத்து பொங்கல் செய்வது பாரம்பரிய முறையாகும். பொங்கல் விழாவானது ஆனி மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். இங்கு காவடி, தீமிதிப்பு, பாற்செம்பு, கற்பூரச்சட்டி போன்ற நிகழ்வுகளுடன் அன்னதான நிகழ்வு இடம்பெறும். இங்கு பொங்கல் நடந்த மறுநாள் மோதக பூஜை இடம் பெறும். இங்கு நெய், எண்ணெய், நீர் போன்றவற்றின் ஊடாக பொரித்து, அவித்து பிள்ளையார் உருவச் சிலைகள் மலைபோல் குவிக்கப்படும்

Leave a Reply