
சோரன்பற்று பளையில் வடிவேலு இரத்தினம் தம்பதிகளின் புதல்வனாக 1962.11.09 ஆம் திகதி பிறந்தார்.இவர் தனது ஆரம்பக் கல்வியை சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தில் கற்றறர்.இவரது 12 வயதிலிருந்து சிந்து நடைக் கூத்தினை பார்வையிடச் சென்று அதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக நடிக்கத் கூத்தினை தொடங்கினார்.காத்தவராயன் கூத்தினை கணபதிப்பிள்ளை அண்ணாவியார் அவர்களை குருவாகக் கொண்டு நடிக்கத் தொடங்கினார்.
இவரது கூத்துக்கள் பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை அம்மன் கோவில்,கிளாலி வீரபத்திரர் கோவில் ஆனைவிழுந்தான் அம்மன் ஆலயம்,சோறன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்மன் ஆலயம் போன்றவற்றில் ஆற்றுகை செய்துள்ளார்.உதயகுமார் அண்ணாவியார் , கணேஸ் அண்ணாவியார் ஆகியோரின் நெறியாள்கையில் கூத்துக்களில் நடித்துள்ளார்.அம்மன் நாரதர் காத்தான் போன்ற பாத்திரங்களில் சிறப்புற நடித்துள்ளார்.
இவரது மனைவி யோகமலர் இறுதியுத்தத்தில் இறந்தபோதும் தன்னுடைய 7 பிள்ளைகளையும் திறம்பட வளர்த்து ஒரு மகனை கலைத்துறையில் கூத்தினை நடிக்கவும் பழக்கியுள்ளார்.இன்று வரை கலைத்துறைக்காக காத்தவராயன் சிந்துநடைக் கூத்தினை பழக்கி வரும் வடிவேலு ஞானச்செல்வம் அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கலைத்தென்றல் விருது வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெருமை கொள்கிறது.

Leave a Reply