சோறன்பற்று
1944.12.08
நாதஸ்வரக் கலைஞர்
பச்சிலைப்பள்ளியில் மிக அபூர்வமாக காணப்படும் நாதஸ்வரக் கலைஞனாக இவர் அடையாளம் காணப்படுகின்றார்;.1944.12.05 அன்;;று பிறந்த இவர் சோரன்பற்று கணேசாவில் இளவயது கல்வியை கற்கும் போதே இசயில் ஆர்;வமுடையவராக இருந்தார்.16,17 வயதில் நுணாவில் குமாராசாமி மாஸ்டரிடம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டதுடன் ஈச்சமோட்டை ஜெயராசாவிடம் முறைப்படி தெளிவுற நாதஸ்வரத்தையும் கற்றுக் கொண்டவர்.
பின்னர் இவர் கச்சாயில் இயங்கிய கண்ணகி நடனக்குழுவுடன் இணைந்து சின்னமேளக் கச்சேரிகளுக்கு வாசித்ததாகவும் அத்துடன் சத்தியவான் சாவித்திரி,காத்தவராயன் போன்றவற்றுக்கு ஆர்மோனியம் வாசித்தவராகவும் காணப்படுகின்றார்.
அளவெட்டி சாந்தன் இசைக்குழுவுடன் இசைக்கச்சேரி 2013 இல் கனகாம்பிகைக்குளம் நெல்லிப்பள்ளம் பிள்ளையார் ,சீராவில் பிள்ளையார்,சோறன்பற்று அம்மன்,கைதடி இணுங்கித்தோட்டம் போன்றவற்றின் திருவிழாக்களில் பங்குபற்றி வாசித்து மக்களினதும் ஆலய நிர்வாகத்தினதும் பாராட்டைப் பெற்றார்.இவர் கலைத்தென்றல்,கலைக்கிளி,பிரதேச சபை விருது என்பவற்றைப் பெற்றுள்ளார்.
Leave a Reply