
அல்லிப்பளை பளையில் 1963.04.04 ஆம் திகதி வாரித்தம்;பி நாகமுத்து தம்பதிகளின் புதல்வனாக பிறந்தார்.இவர் தனது ஆரம்பக் கல்வியை அல்லிப்பளை சி.சி.த.க பாடசாலையில் கல்வி கற்று பின் இடைநிலைக் கல்வியை புலோப்பளை றோ.க.த பாடசாைலையிலும் கல்வி கற்றார்.இவருடைய மூத்த சகோதரர் நாடகக் கலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார்.இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 18 ஆவது வயதிலிருந்து நடிப்புத்துறையில் ஈடுபட்டார்.முதன்முதலாக பளை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதராக நடித்து அனைவரதும் பாராட்டைப் பெற்றார்.
1981 ஆம் ஆண்டு அறத்தி அம்மன் ஆலயத்தில் அரிச்சந்திர மயான காண்டத்தில் அரிச்சந்திரனாக நடிததிருந்தார்.பின் காத்தவராயன் கூத்தில் அம்மன்,சிவன்,மாமா என பல்வேறு பாத்திரங்களில் நடித்தார்.பின்பு தனது 21 ஆவது வயதிலிருந்து அண்ணாவியராக பல இளங் கலைஞர்களை உருவாக்கி ஆற்றுகை செய்து வருகின்றார்.பருத்தித்துறை நெல்லண்டை அம்மன் ஆலயம்,பளை அறத்தி அம்மன் ஆலயம்,வேம்படுகேணி ஞானவைரவர் ஆலயம்,நவினவெளி அம்மன்,வவுனியா தாண்டிக்குளம் விளாத்திக்குளம் அம்மன் ,கரவெட்டி ஆத்தியடி பிள்ளையார் போன்ற ஆலயங்களில் 200 ற்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றிய பெருமைக்குரியவராவார்.நவினவெளி அம்மன் ஆலயத்தால் சிறந்த காத்தவராயன் கூத்து கலைஞராக அண்ணாவியாரக 2022 ஆம் ஆண்டு கௌரவிக்கப்பட்டார்.இவரது கலைச்சேவையை இவரது பிள்ளைகளும் தற்பொழுது ஆற்றி வருகின்றனர்.
தொடர்நது இவர் அண்ணாவியாராக இருந்து இன்றும் அண்ணாவியாராக நடித்து வரகின்றார்.பாசாலை மாணவர்களுக்கும் காத்தவராயன் கூத்தினை பழக்கி வருகின்றார். பச்சிலைப்பள்ளியின் மிகச் சிறந்த கூத்து கலைஞராக திகழும் வாரித்தம்பி உதயகுமார் அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கலைத்தென்றல் விருது வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெருமை கொள்கிறது.

Leave a Reply