கூத்து-தம்பகாமம்
1984.01.30 ஆம் திகதி தம்பகாமத்தில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ் நவாலி மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார்.கல்வி கற்கும் கற்கும் காலங்களில் நாடக கலையில் ஆர்வம் உள்ள இவர் 1996 ஆம் ஆண்டு நெளியாய் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற காத்தவராயன் கூத்தில் பால காத்தானாக பாத்திரமேற்று நடித்துள்ளார்.பிள்பு அதே நாடகத்தில் ஆதிகாத்தான்,முன் அம்மனுக்கு தேன்மொழியாள் எனும் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
மேலும் பளை இரட்டைக்கேணி ஆலயத்தில் சத்தியவான் நாடகத்தில் பிரபல கலைஞர்களுடன் இணைந்து நாரதர் பாத்திரத்திலும் காத்தவராயன் நாடகத்தில் காத்தானாகவும் அரிச்சந்திரா நாடகத்தில் இந்தியாவில் விருது nhற்ற கலைஞர்களுடன் இணைந்நு நடித்த அனுபவம் பெற்றிருக்கிறேன்.இதுவரையில் 25 மேடைகளில் நாடகங்கனை நடித்து வருகிறேன். மேலும் அழிந்து போகும் கலைகளை கட்டிக்காக்கும் பொறுப்புள்ளது. இவர் இன்றும் கலைச்சேவையாற்றி வரும் ஒரு இளம் கலைஞராக காணப்படுகின்றார்.
இவரது கலைச்சேவையை பராட்டி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தாலும் பச்சிலைப்பள்ளி கலாசாரப் பேரவையாலும் 2023 ஆம் ஆண்டு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply