பனை தென்னையுடன் கடல்வளமும் கொழிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் கிளாலியில் பிறந்த பேதுருப்பிள்ளை இயேசுதாசன் சிறந்த பின்னணிப் பாடகராக அறிமுகமானார் இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளாலி றோமன் தமிழ்க்கலவன் பாடசாலையில் மேற்கொண்டார்.
தனது 10ஆவது வயதில் பாடசாலைமட்டத்தில் இடம்பெற்ற ஊதாரிப்பிள்ளை எனும் நாடகத்தில் ஊமைப்பாத்திரத்தில் நடித்து எல்லோரது பாராட்டையும் பெற்றார் பாடசாலை மட்டங்களில் பேச்சுப் போட்டிகளிலும் முதலிடங்களைப் பெற்றுள்ளார்.
தான் சார்ந்த கிறிஸ்தவ சமயத்தின் கலைச் செயற்பாடுகளோடு இணைந்து செயற்படும் இவர் சிறந்த கூத்துப்பாடல்களின் பின்னணிப் பாடகராகவும் மிளிர்கின்றார்.
Leave a Reply