இலக்கியம்-முல்லையடி,பளை
இவர் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் ஆற்றல் பெற்றவர். கவிதை, பாடல், சிறுகதை, மற்றும், ஆய்வுக்கட்டுரைகள் எனப் பத்திரைகள், சஞ்சிகைகளுக்கு எழுதி வருபவர். கலை மன்றம், இளைஞர் கழகம், அறநெறிப்பாடசாலை போன்றவற்றில் அங்கத்துவம் பெற்று வருகின்றார்.
அவள் பெயர் முத்தழகு’ என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2022 ஆம் ஆண்டு தேசிய இலக்கியப் போட்டியில் ஆய்வுக்கட்டுரைக்காக தேசிய விருதாக முதலாமிடம் பெற்றமைக்காக தங்கப்பதக்கம், சான்றிதழ், பணப்பரிசு கிடைக்கப்பெற்றது. இவரை கௌரவப்படுத்தி பாராட்டு வழங்கப்படுகிறது.
மேலும் இவரது கலைச்சேவையை பராட்டி வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் 2024 ஆம் ஆண்டு இவருக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Leave a Reply