செல்லையா தனபாலசிங்கம்

Posted on

by


பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் “சீன் சந்திரன்” என அன்பாக அழைக்கப்படும் செல்லையா தனபாலசிங்கம் அவர்களுக்கு முக்கியமான இடமுண்டு.செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் 1947.03.01 பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பொழுது பாடசாலை மட்டக் கலை நிகழ்வுகளில் இவர் நடித்து வந்தார்.

தனது தந்தையிடம் ஆரம்ப நுணுக்கங்ளை கற்றுக் கொண்ட இவர் அளவெட்டி ஐயாத்துரை அவர்களுடன் நீண்ட காலம் பணியாற்றி ஒப்பனைக் கலை தொடர்பில் பல விடயங்களை அறிந்திருந்தார்.இவரது தந்தையார் சீன் செல்லையாவும் கலாபூசணம் விருது பெற்ற உயரிய கலைஞராவார். தற்போது ஒரு ஒப்பனைக் கலைஞராக செயற்பட்டு வருகின்றார்.ஒப்பனைக் கலைஞராக எல்லா வித நாடகப் பாத்திரங்களையும் சிறப்புற செம்மைபபடுத்துவதுடன்,நாடகங்களுக்குரிய அரங்க பின்னணியான சீன்களை ஒழுங்கமைப்பதிலும் மிகவும் நேர்த்தியாக செயற்பட்டு வருகின்றார்.

இதனாலேயே இவருக்கு சீன் சந்திரன் எனும் பெயரே உருவானது.
நுடிகமணி வைரமுத்து ,நற்குணம்,ஜஸ்கின் மற்றும் சின்னமணி போன்ற நடிப்புக்கலை விற்பனர்கள் பலருக்கு இவர் ஒப்பனைக் கலைஞராக திகழ்ந்திருந்தார்.இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாபூசணம் விருது, கலைக்கிளி விருது, முதலமைச்சர் விருது,பிரதேசசபை விருது என பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *