இவர் சின்னத்தாழையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு பல்துறைக் கலைஞராகத் திகழ்கிறார். செல்லையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தந்தையாரின் வைத்தியத் தொழில் மற்றும் சிறந்த கலைஞராகவும் திகழ்கின்றார்.
1951 அம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பாவோதல் போட்டி மற்றும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இவற்றை விட சிறந்த ஆர்மோனியக் கலைஞராக இன்றுவரை பணியாற்றி வருகின்றார் பல இளம் தலைமுறையினர் இவரிடம் ஆர்மோனியம் கற்று வருகின்றனர்.
இவர் தர்மக்கேணி பூதவராயர் கலாமன்றத்தின் ஊடாக இக்கலைச்சேவையை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது
இவற்றை விட சாஸ்திரங்கள் ஜாதகம் கணித்தல் போன்ற துறைகளிலும் சிறந்த விற்பன்னராக திகழ்கின்றார். அத்துடன் ஆலய பூசகராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவரது கலைச்சேவையை பராட்டி பிரதேச செயலகத்தால் கலைத்தென்றல் விருதும், மாவட்ட செயலகத்தால் கலைக்கிளி விருதும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முதலமைச்சர் விருதும் மற்றும் கலாபூசணம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார
Leave a Reply