தம்பகாமம்-கூத்துக்கலைஞர்
காத்தவராயர் கூத்தின்132 மேடைகளுக்கு மேல் மேடை ஏத்தின எங்கடஆறுமுகம் அண்ணாவியப்பற்றி சொல்லிறதென்டா ஒரு நாள் போதாது இப்படி தான் இந்த பிரதேசத்தின் கலைகளின் உயிர்நாடியாக உள்ள அண்ணாவிமார்களைப் பற்றி கூறுகின்றனர்.மூத்தவரும் பிரதேசத்தின் மூத்த அண்ணாவியுமான கந்தையா ஆறுமுகம் பற்றி இப்பிரதேச இளம் கலைஞர் குறிப்பிடுவர்.
1944.07.02 இல் பிறந்த கந்தையா லட்சுமிப்பிள்ளை தம்பதியர்களின் மகன் ஆறுமுகம் இளவயதில் பாடசாலை ஆசிரியராக இருந்த பொன்னையா ஆசிரியரிடம் நாடகங்களை பயின்றுள்ளார்.சோறன்பற்று கணபதியிடம் தொடச்சியாக மூன்று வருடங்கள் கூத்து பழகியதாகவும்,அவரிடம் பல்வேறு நுணுக்கங்களை இக்காலத்தில் தன்னால் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் கூறும் இவர் விடியவிடிய கூத்துப்பழகும் இந்தக் கலை மரபுகளை திறம்படஎடுத்துக் கூறுபவர்.
1963ஃ64-1966 காலத்தில் பளை இரட்டைக்கேணி அம்மன் கோவிலில் ஆரம்ப கூத்துக்களை ஆடியதாக குறிப்பிடும் போது இவரது ஞாபகசக்திவியப்புக்குரியது.அனைத்து விடயங்களையும் மறக்காது கூறுகிறார்.
இளவயது தொடக்கம் இவர் கூத்துப்பழகுவதும்,இரவில் நித்திரை இல்லாது கூத்துப்பாடல்களை பாடுவதாலும் குறிப்பிட்ட நேரங்களில் தான் உடுக்கை வாசித்ததாகவும்,அதை திறம்பட வாசிப்பதை பழகிக் கொண்டதாகவும் கூறுகிறார்.கூத்துப்பழகேக்க நித்திரை வராது தம்பி,அதால உடுக்கை எடுத்து அடிச்சுஅடிச்சு அதுவே பிறகு பழக்கமா வந்து இப்ப திறமையான நிலையில் இருக்கு என கூறுகிறார்.
காத்தவராயர் கூத்துக்களை மற்றும் பொதுவாகவே இசை நாடகங்களுக்கு கொப்பி அவசியம்.கொப்பி என்றால் அது பாடல்கள் எழுதி வைத்திருப்பது.இவ்வாறாக இவர் தான் கேள்வி ஞானத்தினால் அறிந்ததை கொப்பி எழுதி குருவிடம் காட்டிய பொழுது இவரது திறமையை பாராட்டிய குரு “இனி நீ தனியாக பழக்கலாம் என்ர ஆசிர்வாதம் உனக்கு உண்டு.” என கூறி தனித்து பழக்கும் திறனை வளர்த்து விட்டதாகவும் அதன் பின் 1971 ஆம் ஆண்டில் இருந்து தான் அண்ணாவியாக செயற்பட தொடங்கினார்.நெளியாய் அம்மன் ஆலயத்தில் அவரது மேடையேற்றம் இடம்பெற்றது. இவர் 132 தடவைகளுக்கு மேலாக காத்தவராயன் கூத்தினை மேடையேற்றினார்.
உடுக்கை ஆர்மோனியக் கலைஞராக திகளும் இவர் பல்வேறு நிறுவனங்களால் இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் கலைத்தென்றல் -2011, கலைக்கிளி – 2011, ஆளுநர் விருது – 2013, கலாபூசணம் – 2013 என்பன உட்பட பல விருதுகளை பெற்றார்
Leave a Reply