
ஆரம்பகாலத்தில் இருந்து அந்த இடத்தில் வெள்ளெரிக்கலை மரமும் வேப்பமரமும் உற்பத்தி ஆகி இருந்தது அதில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றுக்குள் ஒரு நாகபாம்பு வெளியில் போறதும் வாறதுமாக இருந்தது சாமிஅம்மா என்பவர் விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார் அதன்பின் கிராமமக்கள் எல்லோரும் சேர்ந்து கிடுகினால் மேய்ந்து ஒரு கொட்டகை அமைத்து அதில் பொங்கல் செய்து சாமிஅம்மா மக்கள் எல்லோரும் சேர்ந்து அதை ஆதரித்து வந்தார்கள் சாமி அம்மா வயது வந்து இறந்து விட்டார் அதன்பின் தலைவர் கந்தையா பூசாரி சிவரா இரண்டு பேரும் சேர்ந்து பூசை செய்து பொங்கல் எல்லாம் வைத்து விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார்கள் அதன்பின்னர் சோமசுந்தர ஆசிரியர் அவர் மக்கள் எல்லோரையும் அழைத்து அதில் எல்லோரையும் அழைத்து அதில் ஒரு மட ஆலயம் கட்டி பொங்கல் பூசை செய்து வந்தார்கள்.
கிராம மக்களும் அந்தக்கிராமத்தில் வசித்து வந்த தயாபரராச முன் நின்று வீபூதி சந்தனம் கும்குமம் தட்டில் ஏந்தி சந்நிதியில் நின்று நிதி சேர்த்து பெரிய ஆலயமாக கட்டி விக்கிரகம் எல்லாம் வைத்து அங்கே பூசகர் குரு பாலச்சந்திரசர்மாவை பூசை செய்து கும்பாபிக்ஷேகம் செய்து வந்தார்கள் கிராமமக்களும் கூடி இப்போது அவருடைய மகன் யதுசர்மாபூசை செய்து வருகிறார்.
இரண்டு நேரமும் ஆலயத்தில் சிவராத்திரி திருவெம்பாவை சனிப்பிரதோக்ஷவிரதம் எல்லாம் நடைபெற்று வருகின்றது இப்போது மணிக்கோபுரம் றெயில் தண்டவாளம் போட்டு தான் அதில் மணி ஏற்றி பூசை நேரம் மணி அடித்து வருகின்றார்கள் இப்போது மணிக்கோபுரம் இல்லை வசந்தமண்டபமும் இல்லை. மக்களின் சிறிய உதவிகள் கேட்டு கிணறு சுற்றுமதில் எல்லாம் அந்தக் கிராமத்தில் இருந்த நளினி என்பவர் 03.11.2002 ஆண்டு எங்களுக்கு அமைத்து வைத்தார் அந்தக்கிராமத்தில் உள்ள மக்கள் குடிநீர் அள்ளிபாவனை செய்து வருகின்றார்கள்.

Leave a Reply